வன்முறை சம்பவங்களால் ஜனநாயகம் பலவீனம் அடையும்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி 11ம்தேதி வரையிலும், பிறகு, மார்ச் 2ம்தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையிலும் 2 கட்டங்களாக நடக்கிறது.. நாளை பட்ஜெட் தாக்கல்செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட்டில் தாக்கப்படும் விஷயங்கள், அரசு கடந்த ஓராண்டில் செலவுசெய்த விஷயங்கள், இரு அவைகளிலும் விவாதிக்கப்பட உள்ளது.

 

ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் என்பது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையாற்றும் போது “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளை சுட்டிக் காட்டி தனது உரையை தொடர்ந்தார்.

 

ஜனாதிபதி உரையின்  முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* நமது அரசாங்கத்தின் சிறப்புக் கோரிக்கையின் பேரில், சவுதி அரேபியா ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 2 லட்சம் இந்திய முஸ்லிம்கள் ஹஜ்பயணம் செய்து உள்ளனர்.  ஹஜ் பயண முழு செயல்முறையும் டிஜிட்டல் மற்றும் ஆன்லைனில் செய்யப்பட்ட முதல்நாடு இந்தியா ஆகும்.
* பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைகிறேன். (குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசும்போது கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது)
* இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி பணியாற்ற நாம் கடமைப் பட்டுள்ளோம்.
* ஏழை மக்களுக்காக அரசு நிறைய திட்டங்களை செயல் படுத்தியுள்ளது.
*  குற்றங்கள் குறைய அரசு சட்டங்கள் இயற்றி உள்ளது. சீட்டுமோசடியில் இருந்து மக்களை அரசு காப்பாற்றி உள்ளது.
* கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பல முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
* கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒருசாதனை என்று சொல்லத்தக்க அளவில் சிறப்பாக செயல்பட்டது.
* மத்திய அரசு ஏழைகளுக்கும் பெண்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தியுள்ளது.
* இந்தியாவின் வளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது.
* மத்திய அரசின் கொள்கைகளும் திட்டங்களும் அனைத்து இந்தியர்களுக்கும் பலனளிக்கின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு

ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு ஒவ்வோர் இளைஞருக்கும் வாய்ப்பு அளித்து, அவர்கள் தங்களின் விருப்பங்களை ...

இந்தியாவின் முதல் விமான உற்பத் ...

இந்தியாவின் முதல் விமான உற்பத்தி ஆலை பிரதமர் நரேந்திரமோடி நேற்று வதோதராவில் இந்தியாவின் முதல் விமான ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக உ ...

பெண்களின் வருமானத்தை லட்சமாக  உயர்த்தும் லக்பதி தீதிதிட்டம் பெண்களின் வருமானத்தை ஆண்டுக்கு ஒருலட்சம் உயர்த்தும் நோக்கில் பிரதமர் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப் ...

கிராமப்புற இந்தியாவில் 95% நிலப்பதிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன நிலப் பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதல், நில உரிமையின் நிர்வாகத்தை ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வின ...

மைகவ் தேசிய விண்வெளி வினாடி வினா குடிமக்களுக்கு நல்ல வாய்ப்பு இந்திய விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய சாதனையாக,சந்திரயான் -3 ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று கு ...

பிரதமர் மோடி அக்டோபர் 28-அன்று குஜராத் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 28 அன்று ...

மருத்துவ செய்திகள்

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...