விடியோவை எடிட்செய்து பிரதமர் பெயரை டேமேஜ் செய்ய முயலும் எதிர்க்கட்சிகள்

நாடாளுமன்றத்தில் நடந்த பிரிவுஉபசார விழாவில், முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, பதில் வணக்கம் செலுத்தாமல் பிரதமர் மோடி புறக்கணித்தது போன்ற விடியோக்களை ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சித் தலைவர்கள் டிவிட்டரில்பரப்பினர்.

அந்தக் காட்சிகள் எடிட் செய்யப்பட்டவை என்று அப்பதிவுகளுக்கு டிவிட்டர் சிவப்புக்கொடியிட்டு பிளாக் செய்துள்ளது.

ஆம் ஆத்மியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் மற்றும் சில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இதுபோன்ற எடிட்செய்த விடியோவை வெளியிட்டிருந்தனர்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜூலை 24) நிறைவடைந்தது. புதிய குடியரசுத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முா்மு திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், ராம்நாத் கோவிந்துக்கு தில்லி நாடாளுமன்ற மையமண்டபத்தில் பிரிவு உபசார விழா சனிக் கிழமை நடத்தப்பட்டது.

அதில், குடியரசு துணைத்தலைவா் வெங்கையா நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அப்போது, நாடாளுமன்றத்தில் இருந்த அனைத்துத் தலைவர்களுக்கும் ராம்நாத்கோவிந்த் வணக்கம் சொல்லிக்கொண்டே வந்தார். பிரதமர் நரேந்திரமோடியின் அருகே ராம்நாத் கோவிந்த் வரும் போது அவர் பிரதமர் மோடியைப் பார்த்து வணக்கம்சொல்வது போன்றும், ஆனால், பிரதமர் மோடியோ ராம்நாத் கோவிந்தைப் பார்த்து பதில் வணக்கம் சொல்லாமல், அங்கிருந்த புகைப்படக் கலைஞர்களை பார்த்து கொண்டிருந்ததுபோன்ற விடியோவை வெளியிட்டனர். ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி அவமதித்தது போன்றும் பதிவிட்டிருந்தனர்.

“எப்படி ஒருஅவமானம், மன்னிக்கவும் சார், இவர்கள்இப்படித்தான், உங்கள் பதவிக் காலம் முடிந்துவிட்டது, இனி உங்களை அவர்கள் பார்க்கக் கூட மாட்டார்கள்” எனறு ஹிந்தியில் குறிப்பிட்டிருந்தனர்.

ஆனால் இதற்கு பாஜக உண்மையான விடியோவைப் பகிர்ந்து, பிரதமர்மோடி ராம்நாத் கோவிந்தை அவமதிக்கவில்லை என்பதை உறுதி செய்திருக்கிறது.

அதுதொடர்பான விடியோவில், ராம்நாத்கோவிந்த் வணக்கம் செலுத்தும் போது பிரதமர் மோடி பதில்வணக்கம் செலுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதும், குடியரசுத் தலைவர் டிவிட்டர் பக்கத்தில் மோடி வணக்கம் செலுத்தும் புகைப் படம் இடம்பெற்றிருப்பதும், ராம்நாத் கோவிந்துக்கு மோடி பதில்வணக்கம் செலுத்திய பிறகு அவரை கடக்கும் போது எடுத்த விடியோவை எடிட்செய்து எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பகிர்ந்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தவிடியோக்கள் தவறானவை என்று டிவிட்டர் நிர்வாகமும் சிவப்புக் கொடியிட்டு தவறான தகவல் என்று குறிப்பிட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...