ஸ்தம்பித்தது! நாகர்கோவில் * 1லட்சம் பேர் பங்கேற்பு * குடியுரிமை சட்ட திருத்த ஆதரவு பேரணி

தேசிய குடியுரிமை சட்டதிருத்த ஆதரவுவிளக்க பேரணியில் 1லட்சத்துக்கும்  அதிகமானோர் திரண்டதால் நாகர்கோவில் நகரம் ஸ்தம்பித்தது.

தேசிய குடியுரிமை சட்டதிருத்த ஆதரவு விளக்கபேரணி மற்றும் விளக்க கூட்டம் கன்னியாகுமரி மாவட்ட பாஜக. சார்பில் நேற்று நடந்தது. பேரணி பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் இருந்து துவங்கி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்புவரை நடந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் பாஜக  தலைவர்கள் அமர்ந்து இருந்தனர். ஏராளமானோர் சாரை சாரையாக கலெக்டர் அலுவலகம் நோக்கிவந்து கொண்டே இருந்தனர். விளக்க கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். இப்ராஹிம், மாநில துணை தலைவர் காந்தி பேசினர்.

இந்துக்கள் ஒன்று சேர: தேசியகுடியுரிமை சட்ட திருத்த மசோதா எதற்கு எதிர்க்கிறார்கள். எந்தவகையில் நீங்கள் பாதிப்பு அடைந்து இருக்கிறீர்கள். நாளை நாங்கள் பாதிப்பு அடைவோம் இப்போதுபாதிப்பு அடையவில்லை என தெரிவிக்கின்றனர். 1947ம் ஆண்டு மதமாற்ற தடைசட்டம் கொண்டு வந்து இருக்க வேண்டும். தமிழகத்தில் ஒருவர் சொல்லுகிறார் நாங்கள் கிறிஸ்தவர்களாக மாற்றி விடுவோம் என்று, இன்னொருவர் முஸ்லிமாக மாற்றிவிடுவோம் என்று சொல்கிறார்.

இனிமேல் மதமாற்றம் கூடாது, மதமாற்ற சக்திகள் ஒதுக்கப்பட வேண்டும். இங்கே காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். அவரை நாம் மதரீதியாக பார்க்கக்கூடாது காவல் துறையாகவே பார்க்க வேண்டும். அதற்காக உடனடியாக சட்டமன்றத்தில் பேசி இருக்கவேண்டும். திமுக பேச ஆரம்பித்து விட்டார்கள், எங்கள் கட்சியில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் 85 சதவீதம்பேர் இந்துக்கள் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள் 15 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இவர்களை வைத்துக் கொண்டு ஸ்டாலின் என்ன செய்ய முடியும். இந்துக்கள் ஒன்றுசேர தொடங்கி விட்டார்கள். இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார்.

.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணி ...

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில்தான் இருக்கிறோம் என மத்திய அமைச்சர் ...

ஜனநாயகத்தின் தாயாகம் இந்தியா

ஜனநாயகத்தின் தாயாகம்  இந்தியா இந்தியா, ஜனநாயகத்தின் தாயாக உள்ளதாகவும், பலசவால்களுக்கு மத்தியில் அதிவேகமாக ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...