இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை – அமித்ஷா

” இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் இல்லை,” என குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா – 2025 மசோதா மீதான விவாதத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டினர் வருகையை நிர்வகிக்க, பாஸ்போர்ட் சட்டம் – 1920, வெளிநாட்டினர் பதிவு சட்டம் – 1939, வெளிநாட்டினர் சட்டம் – 1946 மற்றும் குடியுரிமை சட்டம் என, நான்கு விதமான சட்டங்கள் தற்போது அமலில் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டங்களை ஓரங்கட்டிவிட்டு, புதிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீர்மானித்து, சமீபத்தில் லோக்சபாவில், குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் மசோதா – 2025ஐ தாக்கல் செய்தது.

லோக்சபாவில் இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: சுற்றுலா, கல்வி சுகாதாரம் மற்றும் வணிகத்திற்காக இந்தியா வருபவர்களை வரவேற்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளபவர்களை கடினமாக கையாள்வோம்.நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம். இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்காக வருபவர்களை எப்போதும் வரவேற்போம்.

இந்த மசோதா, நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருளாதாரம் மற்றும் வணிகத்தை ஊக்குவிக்கும். சுகாதாரம் மற்றும் கல்வித்துறைக்கு ஆதரவாக இருக்கும். இந்த மசோதா, இந்தியா வருபவர்களின் அனைத்து தகவல்களும் கிடைப்பதை உறுதி செய்யும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதனைத் தொடர்ந்து குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா -2025 லோக்சபாவில் நிறைவேறியது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...