கொரோனா வைரஸை எதிர் கொள்ள வலிமையான செயல் திட்டம் வகுக்க சார்க் நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்பதாக பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.
உலகநாடுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போராடிவருகின்றன. இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளிலும் வெளிநாட்டில் இருந்துவந்தவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவிவருகிறது.
இந்நிலையில் 8 தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் (SAARC) நாடுகளின் தலைவர்கள் கொரோனாவை எதிர் கொள்ள வலிமையான செயல்திட்டத்தை ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும். அதுகுறித்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த சார்க்நாடுகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று டுவிட்டரில் அழைப்பு விடுத்திருந்தார்.
அவர் அழைப்பு விடுத்த சிலமணி நேரங்களில் இலங்கை மற்றும் மாலத்தீவு அழைப்பை ஏற்பதாக அறிவித்தன.அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அரசும் வீடியோ கான்பிரஸ் மூலமாக கொரோனா குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்பதாக இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஆயிஷா ஃபரூக்கி
‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சார்க்நாடுகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசிக்க பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு சுகாதாரத்துறை செயலாளர் ஜஃபார் மிர்ஸா தயாராக உள்ளார் என ஆயிஷா ஃபரூக்கி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இதுவரை 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது.
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |