நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு உணவுப் பயிற்சியாளரின் ஆலோசனையைப் பெறவேண்டும்.
காலை 6.30 காபி/டீ/பால்(சர்க்கரை இல்லாமல்)
காலை8.30 இட்லி/தோசை/இடியாப்பம்/பொங்கல்/உப்புமா/சப்பாத்தி/கேழ்வரகு கூழ்/ ……சாம்பார்/சட்னி(தேங்காய் தவிர) முட்டை
காலை 10.30 மோர்/இளநீர்/சூப்/வெள்ளரிக்காய்
மதியம் 1.00 சாதம்/சப்பாத்தி/சூப்/ரசம்/சாம்பார்/பருப்பு/கறி/மீன்/கீரை/காய்கறி பொரியல்/மோர்/தயிர் பழம்
மாலை 4.00 காபி/டீ/பால்(சர்க்கரை இல்லாமல்) இனிப்பு குறைந்த/ இல்லாத பிஸ்கட்/சுண்டல்/சான்ட்விச்
இரவு 7.30 சாதம்/சப்பாத்தி/இட்லி/சாம்பார்/பருப்பு/கறி/மீன்/காய்கறி/ரசம்//தயிர்/பழம்
இரவு 9.30 பால் (சர்க்கரை இல்லாமல்)
நீரிழிவுநோய் உடையவர்கள் எந்த உணவையும் தவிர்க்க வேண்டியதில்லை
நீரிழிவுநோய் உடையவர்கள் தவிர்க்கக் கூடிய உணவு என்று எதுவுமே இல்லை. அவர்கள் எல்லாவித உணவையும் சாப்பிடலாம். ஆனால் எதையுமே அதிகமாகச் சாப்பிடக்கூடாது.
சர்க்கரை
நீரிழிவுநோய் உடையவர்கள் முழுக்க முழுக்க சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை.
நீரிழிவுநோய் உடையவர்கள் சர்க்கரையைச் சேர்த்துக் கொள்ளும்போது, சர்க்கரை அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்ளும்போதும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரிக்கும்.
எனவே இனிப்பு வகைகள் மிகமிகச் சிறிய, அளவில், தங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கவனத்தில் கொண்டு எடுத்துக் கொள்ளலாம். அதே போல டீ, காபியில் சர்க்கரையை மிகக் குறைவாகச் சேர்த்துக் கொள்வதும் அனுமதிக்கப்படுகிறது.
கொழுப்பு
கொழுப்புச்சத்து நிறைந்த, எண்ணெய் கலந்த உணவுப் பொருட்கள் உண்பதைக் குறைக்க வேண்டும்.
ஆலிவ் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய் ஆகியவைகளை நிறைய பயன்படுத்தலாம்.
தயிர், எண்ணெய், நெய் ஆகியவை கொழுப்பை அதிகரிப்பதால் அவை தவிர்க்கப்பட வேண்டும்.
பாகற்காய்
பாகற்காய் எந்த விதத்திலும் இன்சுலின் தேவையை ஈடு செய்வதில்லை. உடல் எடையைக் குறைப்பதற்கும் உதவுவதில்லை. மாத்திரைகள் பயன்படுத்துவதையும் குறைக்காது.
காரட், பழங்கள்
காரட், பழங்கள் உடல் நலத்திற்கும் பயன்தருவனதான் என்றாலும், அவற்றையும்கூட அதிகமாக உண்ணக் கூடாது.
ஆறுமாதத்திற்கொருமுறை உணவுப் பயிற்ச்சியாளரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
எந்த உணவுப் பொருளிலும் சர்க்கரைப் பொருள் இயற்கையாகவே சேர்ந்து உள்ளது; ஆனால் சிலவற்றின் கூடுதலாகவும், சிலவற்றில் மிகக் குறைவாகவும் உள்ளது.
எனவே உணவுப் பொருட்களின் தன்மைகளை அறிந்து அவற்றைத் தேவையான அளவில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்த யோகா உதவும்
“யோகா நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நடத்தல் அல்லது நீந்துவது அல்லது ஓடுவது போன்ற எளிமையான உடற்பயிற்சியைச் செய்து வருவதும் நீரிழிவுநோயைக் கட்டுப்படுத்த உதவும். இந்த உடற்பயிற்சிகளுடன் யோகாசனப் பயிற்சியையும் செய்யும்போது நீரிழிவுநோய் மிகச் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படுகிறது.
நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.