கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம்

கொரோனா இந்தியாவை தாக்காது என்பது தவறு.இதனைதடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு தேவை.மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம். மக்கள் அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்து வீட்டில் இருந்தே வேலைசெய்ய வேண்டும். கொரேனா வைரஸ் நம்மை ஒன்றும்செய்யாது என எண்ண வேண்டாம். கொரோனாவை தடுத்து நமது வலிமையை நிருபிப்போம். மக்களுக்காக , மக்களே சுயமாக ஊரடங்கு நடை முறையை பின்பற்றுவோம்.

22 ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டின் முன்னால் அத்தியாவசிய சேவை செய்வோருக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். கொரோனா வைரசுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் அன்று இந்தியாவின் சோதனை ஓட்டமாக இருக்கும். அத்தியாவசிய பொருட்களை வாங்கிகுவிக்க வேண்டாம்.தேவையின்றி மருத்துவமனைகளில் குவியாமல் பதற்றத்தை தவிர்க்கவேண்டும். மக்கள் விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டும். அலட்சியம் கூடாது.கொரோனா வரைஸ் காரணமாக ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது.மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மிகமுக்கியம்.

கடந்த இரண்டு மாதங்களாக பெரும் கவலையோடு உலகம் முழுக்க இதுபரவி வருவதை நாம் பார்த்துவருகிறோம். உலகம் தற்போது மிகப்பெரிய சிக்கலை கடந்து கொண்டு இருக்கிறது. முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப் போரை விடவும் அதிகப்படியான நாடுகள் இந்த வைரஸால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

ஒரு வைரஸ் காரணமாக இத்தனை நாடுகள் பாதிக்கப்படுவது என்பது முன்னெப்போதும் இல்லாதளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டிய காலகட்டம் இது. எப்போதெல்லாம் இயற்கை பேரிடர் வருகிறதோ, அப்போதெல்லாம் ஒருகுறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும்தான் அதுபாதிப்பை ஏற்படுத்தும்.

ஆனால் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீது வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 130 கோடி பேரும் கொரோனாவுக்கு எதிரானபோரை முன்னெடுக்க வர வேண்டும். சோசியல் டிஸ்டன்ஸ் என்கிற சமூக இடைவெளியை நாம் கடைபிடிக்க வேண்டியது கட்டாயம்.

அத்தியாவசிய சேவையை செய்பவர்கள் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிற்றுகிழமை வெளியே வரவேண்டாம். மருத்துவர்கள் ஊடகத்துறையினர் போக்குவரத்து துறையினருக்கு மற்றவர்கள் தொந்தரவு தரவேண்டாம். நோய்க்கு ஆளாகாதீர்கள் .நோய்களை பரப்பாதீர்கள் . பொருளாதார மந்தநிலையை போக்குவதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் ஆலோசனைகுழு அமைக்கப் பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு கைதட்டல் மூலம் நன்றி கூறுங்கள்.

கொரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியதாவது:

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...