சுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம் உணரும்படிச் செய்தார். மேலும் அவர், நம்முடைய குற்றங்களையும் குறைகளையும் எடுத்துக்காட்டினார்.
அப்போது இந்தியா தமோகுணத்தில் ஆழ்ந்திருந்தது. ஆதலால் இந்திய மக்கள் பலவீனத்தைப் பற்றின் மையாகவும், சாந்தியாகவும் தவறாக நினைத்தார்கள். சுவாமி விவேகானந்தர் மக்கள் தாங்கள் இருந்த தமோகுணத்தையும், அதிலிருந்து வெளியேறி நிமிர்ந்து நிற்க வேண்டிய அவசியத்தையும் உணரும்படிச் செய்தார்.
""நம் சகோதர மக்களோடு வாழும் அன்றாட வாழ்க்கையிலும், நம் முயற்சிகளிலும் இடம் பெறாத ஆன்மிகத் தத்துவஞானம் பயனற்றது'' என்ற உண்மையை, சுவாமி விவேகானந்தர் நம்மை உணரும் படிச் செய்தார்.
பசியிலும் வறுமையிலும் வாடும் தரித்திர நாராயணர்களாகிய ஆயிரக்கணக்கான மக்களுக்குப் பணி செய்யும் பொருட்டும், அவர்கள் பண்பாடும் உயர்வும் பெறும் பொருட்டும், நாம் நமது வாழ்க்கையை அர்ப்பிக்க வேண்டும் என்று அவர் நமக்குப் போதித்தார்.
"தரித்திர நாராயணர்' என்ற சொல்லை உருவாக் கியவர் சுவாமி விவேகானந்தர். அதை மக்களுக்குப் பரப்பி வழங்கியவர் காந்தியடிகள்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.