கொரோனா பெருந்தொற்றை கையாண்டவிதத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளில் குறைகள் இருந்திருக்கலாம், தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், அரசின் அர்பணிப்பை யாராலும் குறை கூற முடியாது. அதன், அர்பணிப்பு மிகவும் தெளிவாக இருந்தது என்று அமித்ஷா தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று முடக்க நிலை காரணமாக ஏற்பட்ட துயரங்களை துடைக்க நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு 1,70,000 கோடி பொருளாதார உதவிதொகுப்பை அறிவித்தது. ஆனால்,கொரோன தடுப்பு நடவடிக்கைகளில் எதிர்க் கட்சிகளின் செயல்பாடுகள் என்ன? என்ற கேள்வியை காணொலி காட்சி மூலம் ஓடிசா மக்களோடு உரையாற்றிய போது அமித் ஷா எழுப்பினார்.
அமித் ஷா கூறுகையில், ” சிலர் ஸ்வீடன் நாட்டில் இருந்து கொண்டு, இந்தியாவில் கொரோனா பரவலை எப்படி தடுக்கவேண்டும் என்று போதித்து வருகின்றனர். சிலர் அமெரிக்காவில் இருந்து புத்திமதி சொல்கின்றனர். நீங்கள் என்ன செய்தீர்கள்? நாட்டு மக்களின் துயரங்களுக்கு உங்களின் செயல்பாடுகள் என்ன? அதை வெளிப்படைத் தன்மையோடு தெரிவியுங்கள். நான், எனதுபதிலை இங்கு பதிவு செய்து வருகிறேன். 60 கோடி மக்களின் துரயங்களை சமாளிக்க நரேந்திர மோடி 1,70,000 கோடி அளவிலான பொருளாதார உதவித்தொகுப்பை அறிவித்தார். நேர்காணலை தவிர, உங்களின் பங்களிப்பு என்ன? ” என்றுகேள்வி எழுப்பினர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள்சொந்த இடங்களுக்கு திரும்புகையில் துயரங்களை அனுபவித்தனர் என்பதை மறுப்பதற்கு இல்லை. இதுமிகவும் துயரமான சம்பவம். இந்த துயரங்களை என்னால் உணரமுடிந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த துயரங்களை உள்வாங்கினார்.
நாட்டில் பல்வேறு இடங்களில் சிக்கித்தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களை அடையவேண்டும் என்பதற்காக, மே 1ம் தேதியில் இருந்து சிறப்பு ஷார்மிக் ரயில்கள் இயக்கப்பட்டன. முகாமில் தங்கவைக்கப் பட்டிருக்கும் தொழிலாளர்கள் சிறப்பு வாகனங்கள் மூலம் ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்லப் பட்டனர். பெருவாரியான செலவினங்களை மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டன.
இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் இவர்களுக்கு உணவும், தண்ணீரும் கொடுக்கப் பட்டது. ரயில்வே நிலையத்தில்இருந்து வெளியேறிய தொழிலாளர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு, வீடு திரும்புவதற்கு முன்பு 1,000 -2,000 வரையிலான நிதியுதவியும் வழங்கப்பட்து . ஓடிசா மாநிலத்திற்குள் மட்டும் கிட்டத் தட்ட 3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் வருகைபுரிந்தனர். மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளை மத்திய, மாநில அரசுகள் சிந்தித்து செயல்பட்ட காரணத்தினால் தான், 1.25 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த இடங்களில் தத்தம் குடும்பங்களோடு வாழ்ந்து வருகின்றனர்”என்று தெரிவித்தார்.
மாநில அரசுகள் சிறப்பாக செயல்பட்டதாக நான் நம்புகிறேன். கூட்டாச்சித் தத்துவத்தை நிலைநாட்டும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்தது. கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 5 முறை மாநில முதல்வர்களுடன் பிரதமர் காணொலிகாட்சி மூலம் உரையாற்றினார். மாநிலங்களின் உண்மையான மன நிலையை நாங்கள் உணர முயன்றோம். அவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்தும் அளித்தோம். பாரபட்சம் காட்டாமல் ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிகைகளில் ஈடுபட்டோம். இது தான், பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடு” என்று தெரிவித்தார்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக அமித் ஷா தெரிவித்தார். கொரோனா பெருந் தொற்றுக்கு பெரிய நாடுகள் சிதைத்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா எண்ணற்ற பேரிடர்களையும், பெருந்தொற்றையும் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம், தடுப்பு நடவடிக்கைகளில் அரசுநிர்வாகங்கள் முதன்மையாக இருந்தன. ஆனால், நரேந்திரா மோடி மக்களை முதன்மைப் படுத்தினர். அன்றாட மக்களை கோவிட் -19 வீரர்களாக மாற்றினார். விளைவு, மக்களின் விழிப்புணர்வு அரசு நிர்வாகத்தை பலபடுத்தும் வகையில் அமைந்தது” என்று தெரிவித்தார்.
முதலாவதாக, மார்ச் 22 அன்று கடைபிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு. கொரோனா தடுப்பு நடவடிக்கைகுறித்த வரலாறு புத்தகத்தில், மக்கள் தானாக முன்வந்து ஊரடங்கு வெற்றியாக்கியதை பொன் வார்த்தைகளில் எழுதப்படவேண்டும். தங்களால் முடியும் என்றும், தாங்கள் முடிவுசெய்தால், பெரிய சவாலை ஒன்றிணைந்து எதிர்கொண்டு வெற்றிபெறுவோம் என்றும் நாட்டு மக்கள் இந்த ஊரடங்கு மூலம் சுட்டிக்காட்டினர். மின் விளக்குகள் அணைக்கப் பட்டும், தீபங்கள் ஏற்றப்பட்டும், ஒலி எழுப்பியும் கொரோனா வீரர்களுக்கு தங்களது நன்றியினை பறைசாற்றினார் என்று தெரிவித்தார்.
சுய சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்திகளை பிரதமர் ஊக்குவித்து வருகிறார் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட ஓடிசா மாநிலத்திற்கு வழங்கப்பட்ட பொருளாதார அறிவிப்புகள் குறித்து பேசிய அமித்ஷா,”பிரதமர் தனது உயிரையும் பணயம் வைத்து, ஓடிசா மக்களுக்கு தோல்கொடுத்தார்” என்று தெரிவித்தார்.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |