”டில்லியில் முதல்வராக இருந்த கெஜ்ரிவால், மக்களுக்கு செய்தது என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து, கணக்கு காட்டியே தீர வேண்டும்,” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வராக பதவி வகித்த போது, டில்லியின் சிவில் லைன் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் வசித்தார். அப்போது இந்த பங்களாவில், 45 கோடி ரூபாய் செலவு செய்து புனரமைப்பு பணிகளை மேற்கொண்டார். அது குறித்து பா.ஜ.,வினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இது குறித்து பிரதமர் மோடி, கெஜ்ரிவால் மீது குற்றம் சாட்டியிருந்தார். தற்போது அவரை தொடர்ந்து அமித் ஷாவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து டில்லியில் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:
டில்லியில் உள்ள எனது வீட்டிற்கு சிறுவர்கள் சில பேர் வந்து என்னை சந்தித்தனர். அப்போது, நான் அவர்களிடம், டில்லிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் என்ன செய்துள்ளார் என கேட்டேன்.
அதற்கு, அவர்களில் ஒரு சிறுவன், ஒரு பெரிய கண்ணாடி மாளிகை அவருக்கு உள்ளது என்றான். அவர் அரசியலுக்கு வரும்போது, தான் அரசின் பங்களாவோ அல்லது காரோ பயன்படுத்தவில்லை என்று கூறினார். தற்போது,டில்லிவாசிகளின் பணத்தில் பெரிய பங்களாவை உருவாக்கி உள்ளார். கெஜ்ரிவால், நீங்கள் டில்லி மக்களுக்கு கணக்கு காட்டியே தீர வேண்டும்.
இவ்வாறு அமித் ஷா பேசினார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |