பாதுகாப்புத் துறை குழுவில் பங்கேற்காத ராகுல் கேள்வி எழுப்பலாமா?

பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் ஒரு முறைகூட ராகுல் காந்தி பங்கேற்காத நிலையில், ராணுவத்தின் வீரம்குறித்து கேள்வி எழுப்பி, தேசத்தை சோர்வடையச் செய்கிறார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா சாடியுள்ளார்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவவீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தவிவகாரத்தில் ராகுல் காந்தி மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டு கூறிவருகிறார். இதற்கு பதிலடியாகவே பாஜக தேசியத்தலைவர் ஜெ.பி. நட்டா, டுவிட்டரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை கடுமையாகச் சாடி கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில் ‘ ராகுல் காந்தி இதுவரை பாதுகாப்புத் துறைக்கான நடாாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தில் ஒரு முறைகூட பங்கேற்றது இல்லை. ஆனால், சொல்லவே வருத்தமாக இருக்கிறது, தொடர்ந்து நமது ராணுவவீரர்களின் வீரத்தைப் பற்றி கேள்வி எழுப்பி, தேசத்தை மனச்சோர்வுக் குள்ளாக்குகிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் இது போன்று செய்யமாட்டார்.

ராகுல்காந்தி புனிதமான அரச பரம்பரையில் வந்தவர். பாதுகாப்புத் துறையைப் பொறுத்தவரை குழுக்களில் பங்கேற்பதெல்லாம் பெரியவிஷயம் அல்ல, உத்தரவிட மட்டுமே செய்கின்றன. நாடாளுமன்ற விவகாரங்களைப் புரிந்துகொள்ள தகுதியான பலஉறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். ஆனால் அந்தவாரிசுக் குடும்பம் அத்தகைய தலைவர்களை ஒரு போதும் வளரவிட்டது இல்லை. உண்மையாகவே இதுவேதனை’ எனத் தெரிவித்துள்ளார்.

நட்டாவின் குற்றச்சாட்டுக்கு இன்னும் காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்த வித பதிலும் வரவில்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...