காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை போன்றவற்றில் காரச்சுவை அதிகம் உள்ளது. 'கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது' என்பது பழமொழி.
காரத்தில் மிளகு முதலிடம் வகிக்கிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கவும், சீரணத்திற்கும் துணைபுரிகிறது. காரம் நாவிற்குச் சுவையையும், உடலுக்குச் சூட்டையும், உணர்வையும் தருகிறது.
காரம் உமிழ்நீர் சுரக்க உதவும். உமிழ்நீர் சீரணத்திற்கு உதவுகிறது. உணவை மெல்லும்போது உணவு உமிழ்நீரோடு கலப்பதால் நன்கு சீரணிக்கப்படுகிறது. உமிழ்நீர் வெளியில் எங்கும் விற்பனைக்குக் கிடைப்பதன்று. அதனால் உணவை நன்றாக மென்று பிறகுதான் உண்ண வேண்டும். 'நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்பது பழமொழி.
உணவுண்ணும்போது உணவுடன் உமிழ்நீர் கலந்து செல்ல வேண்டும். நாவில் உணவின் சுவை அறிய வேண்டும். அப்போது உடலுக்குத் தேவையற்ற கல், மண், நார், முடி போன்றவை நாவில், பற்களில் அகப்படும். உணவை நன்றாக மென்று உண்பதால் உணவும் சீரான முறையில் சீரணமாகும்.
காரம் அளவுடன் பயன்படுத்தினால் புண்களை ஆற்ற உதவும். அளவுக்கு அதிகமானால் அதற்கேற்றவாறு உடல் சூடு அதிகமாகும். மற்றும் உணர்ச்சிவசப்படுவது அதிகம் ஆகும். கண்கள் சிவந்து அத்துடன் கோபம் அதிகமாகும்.
வயிற்றில் புண் உண்டாகும். மலம் கழிவது மாறுபடும். மலம் கழியும்போதும், சிறுநீர் கழியும்போதும், எரிச்சல் உண்டாகும். வயிற்றில் சீரணிக்கும் தன்மை இயல்பு நிலையிலிருந்து மாறிவிடும்.
நன்றி : வேலூர் மா.குணசேகரன்
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.