அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும்
சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த பானங்கள் மற்றும் நீர் பருகுவதை தவிர்த்து சுடு் நீர் அருந்தவும் .
வயிறுமுட்ட உண்ணுவதை தவிர்த்து விட வேண்டும் . உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
1. அதிகமாக உண்ணுவது, மன அழுத்தம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
2. ஜீரண சத்தியை அதிகரிக்க எலுமிச்ச பழம் சிறந்தது. அரைமூடி எலுமிச்சம் பழத்தின் சாரை ஒரு டம்ளர் நீரில் கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து குடிக்கவும். தண்ணீர் சூடாக இருப்பது நன்று .
3. இஞ்சியும் செரிமானத்திற்கு உதவும். உப்பில் தோய்த்த இஞ்சித்துண்டுகளை உணவிற்கு முன்பு சாப்பிடவும்.
4. இஞ்சி சாரையும் , எலுமிச்சை சாற்றையும் நன்றாக கலந்து ஒருஸ்பூன் அளவுக்கு குடித்தால் செரிமான கோளறு நீங்கும்
5. ஒரு தேக்கரண்டி ஜீரகம் கலந்த நீரில் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி சாறை கலந்து, உப்புபோட்டு குடிக்கலாம்.
6. ஓமம் தண்ணீர் நன்று . ஓமத்தை மோரில் கலந்தும் அருந்தலாம்
.
7. ஆயுர்வேத குறிப்பு –
கோதுமை உணவிற்க்கு பிறகு குளிர்ந்த நீரை அருந்தவும் ,
மாவு பண்டங்களை சாப்பிட்ட பின் சூடான நீரை அருந்தவும்,
பயறு உணவு வகைகளை உண்ட பின் நீர் மோர் அருந்தவும்
TAGS;ஜீரணம், ஜீரண சக்தி பெற , எளிதில், ஜீரணம் ஜீரணிக்க , செரிமானத்திற்கு, செரிமானம் , செரிமான முறைமை
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.