ராஜ்யசபாவில் பலம் பெரும் பாஜக

கடந்த பல வருடங்களாக ராஜ்ய சபாவில் காங்கிரஸ் கட்சியே ஆதிக்கம் செலுத்திவந்தது. பாஜகவின் பலம் மிகவும்குறைந்து இருந்ததால், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதில் கூட்டணி கட்சிகளை நம்பியே இருக்கவேண்டிய நிலை இருந்தது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்ய சபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட, 10 எம்பி-க்களின் பதவிக்காலம் முடிவடை வந்ததை அடுத்து, அந்த இடங்களுக்கு தேர்தல்நடந்தது. அதில், மத்திய நகர்புற மேம்பாட்டுதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட ஒன்பது பாஜக உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்ய பட்டனர்.

அதபோல, உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் ராஜ் பாபரின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து, அங்கும், பாஜக-வைச் சேர்ந்த, நரேஷ் பன்சால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 38 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்யசபாவில், பா.ஜ.,வின் பலம், 92 ஆக உயர்ந்துள்ளது. இதைதவிர, கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு, ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர்.ராம்தாஸ் அதவாலேவின் இந்திய குடியரசுகட்சி, அசாம் கனபரிஷத், மிசோ தேசிய முன்னணி, தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, பாட்டாளி மக்கள்கட்சி, போடோலாந்து மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளுக்கு, தலா, ஒருஉறுப்பினர் உள்ளனர்.

அந்த ஏழு உறுப்பினர் களையும் சேர்த்தால், ராஜ்யசபாவில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் பலம், 104 ஆக உயர்ந்துள்ளது.இவை தவிர, அ.தி.மு.க.,வுக்கு, 9, பிஜு ஜனதா தளம், 9, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு, 7, ஒய்.எஸ்.ஆர்., காங்.,குக்கு, 6 ராஜ்ய சபா உறுப்பினர்கள் உள்ளனர்.இக்கட்சிகள், பிரச்னைகளின் அடிப்படையில், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. எனவே, ராஜ்யசபாவில், தே.ஜ., கூட்டணியின் பலம் உயர்ந்துள்ளது.லோக் சபாவில் பெரும்பான்மை பலம் இருப்பதால், தே.ஜ., கூட்டணியின் மசோதாக்கள் அங்கு சிக்கலின்றி நிறைவேற்றப்பட்டுவந்தன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...