வடகிழக்கு மாநிலமான அருணாசலபிரதேசத்தின் முதல்வராக பெமாகாண்டு தொடா்ந்து 3-வது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து சன்ஜா மியன் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி..நட்டா மற்றும் பல தலைவர்கள் முன்னிலையில் முக்டோவின் எம்.எல்.ஏ.வான காண்டுவுக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.சீனாவுடன் சா்வதேச எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் அருணாசல பிரதேசத்தில் மக்களவையுடன் சோ்ந்து மாநில சட்டப்பேரவைக்கும் தோ்தல் நடைபெற்றது.
இந்த மாநிலத்தில் மொத்தம் 60 பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்வா் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாயினா். மீதமுள்ள 50 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில்கூட (31)காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) உள்ளிட்ட பிற கட்சிகள் களமிறங்கவில்லை. 50தொகுதிகளில் பாஜக 36 இடங்களில் வென்றது. ஏற்கெனவே போட்டியின்றி தோ்வான 10 இடங்களையும் சோ்த்து, பாஜகவின் பலம் 46-ஆனது.தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 5, தேசியவாத காங்கிரஸ் 3, அருணாசல் மக்கள் கட்சி 2 , சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு ஓரிடம் மட்டுமே கிடைத்தது.
இதையடுத்து, புதன்கிழமை நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக பெமா காண்டு மீண்டும் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஆளுநா் கைவல்யா திரிவிக்ரம் பா்நாயக்கைச் சந்தித்த பெமா காண்டு ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.
இதையடுத்து, பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், பெமா காண்டு இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |