உண்மைகளை மாற்றக் கூடாது; திரித்துக் கூறக்கூடாது

ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு சினிமா எடுக்கும்போது, சினிமாவுக்காக சில விசயங்களை மாற்றிக்கொள்ளலாம் தான். ஆனால், உண்மைகளை மாற்றக் கூடாது; திரித்துக் கூறக்கூடாது.

‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை நாம் இன்னும் பார்க்கவில்லை. நம்பத் தகுந்த நண்பர் ஒருவரின் விமர்சனம் ஒன்றைப் படித்துவிட்டு இந்தப் பதிவினையிடுகிறேன்.
கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ‘சூரரைப் போற்று’ படம்.

கேப்டன் கோபிநாத் ஐயங்கார் சமுதாயத்தைச் சார்ந்தவர். ஆனால் அவரைப் பட்டியல் சமுதாயத்தைச் சார்ந்தவராக காண்பித்திருக்கிறார்களாம் படத்தில்!
அதேசமயம், ஹீரோவின் எதிரிகளை மட்டும்  பிராமணர்களாகக் காண்பித்திருக்கிறார்களாம்! மேலும், கேப்டன் கோபினாத்தின் திருமணம் ஐயங்கார் முறைப்படி நடந்தத் திருமணம். ஆனால் திரைப்படத்தில்ஈ.வெ.ரா. கோஷ்டியின்சுயமரியாதைத் திருமணமாகக் காண்பித்திருக்கிறார்களாம்!
இதெல்லாம் நேர்மையா?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்…கேப்டன் கோபிநாத் உண்மையில் பட்டியல் சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்து, திரைப்படத்தில் அவரை பிராமணராக மாற்றிக் காண்பித்திருந்தால் இந்நேரம் எவ்வளவு எதிர்ப்பு வந்திருக்கும்?
அதேபோல் கேப்டன் கோபிநாத் உண்மையில் சுயமரியாதைத் திருமணம் செய்திருந்து, படத்தில் அதனை மறைத்து அவர் வைதீக முறைப்படி திருமணம் செய்துகொண்டதாகக் காண்பித்திருந்தால் என்னவாகியிருக்கும்???.

நம்மை பொருத்தவரை எதுவும் உயர்ந்த சாதியில்லை; எதுவும் நிச்சயம் தாழ்ந்த சாதியில்லை. சாதியில் உயர்வு, தாழ்வு காண்பது பேதமை என்று திண்ணமாக எண்ணுகிறோம். அதேவேளை, திரைப்படம் உள்ளிட்ட படைப்புகளில் உள்ளது உள்ளபடி சொல்லப்பட வேண்டுமென்று நினைக்கிறோம்.

NEET, EIA Draft உள்ளிட்ட விசயங்களுக்கு எதிராகவெல்லாம் பொங்கும் புத்திசாலிநடிகர் சூர்யா,தனது படம் ஓட வேண்டும், அதன்மூலம் கோடிகோடியாய் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காககேப்டன் கோபிநாத் பற்றிய உண்மை விசயங்களை இப்படித் திரித்துக் கூறி படம் எடுக்கலாமா?.தனது விசயங்களில் நேர்மையின்றி நடக்கும் எவனுக்கும்அடுத்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்ய அருகதையில்லை!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...