தமிழர்வாழ்வு உயரட்டும், தமிழகம் தரணியின் தலைமையேற்கட்டும்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ்சொந்தங்களுக்கும், எனது முதற்கண் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உழுதுண்டு வாழ்வாரேவாழ்வார் என்பதற்கேற்ப, இயற்கையை வணங்கி, விவசாயத்தில் பெரும்பங்குவகிக்கும் மாடுகள், விவசாய கருவிகள் என அனைத்திற்கும் நன்றி தெரிவித்து , அவைகளை கொண்டாடும் பண்புமிக்க பாரம்பரியம் நமது தமிழர் பாரம்பரியம். இது உலகில் வேறெங்கும் இல்லை.

இந்த உன்னதமான கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் போற்றி, பாதுகாத்து, வருகின்ற தலைமுறைகளிடம் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. எட்டுத் திக்கும் தமிழின் மாண்பையும், தமிழ் கலாசாரத்தின் மேன்மையையும் பறைசாற்றிக் கொண்டிருக்கும், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் உற்ற நண்பன், நமது பாரதப்பிரதமர் மரியாதைக்குரிய நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில், அனைவரும் இணைந்து, அனைவருக்கும் வளர்ச்சி என பயணிக்கும் ஆட்சியில், தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அது மிகையல்ல.

தைத் திருநாளாம் பொங்கலில், தமிழ் செழிக்கட்டும், தமிழர்வாழ்வு உயரட்டும், தமிழகம் தரணியின் தலைமையேற்கட்டும். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும், எனது சார்பிலும் தமிழ்சொந்தங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...