அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் சித்தர்கள் அறுகு என பெயரிட்டுள்ளனர்.

இடகலை, பிங்கலை நமது தச நாடிகளில் பிரதானமானது, அறுகம்புல் இவை இரண்டையும் மற்றும் இவை சார்ந்த 72000 நரம்புகளையும் இயக்கவல்லது.

அறுகம்புல்லின் ஊறல் நீரையும் , பாளையும் சேர்த்து உட்கொள்ள  கண் புகைச்சல், கண்நோய், குருதியழல், தலை நோய்  இவை நீங்கும் .

அறுகம்புல்லுடன் சிறிது அலவு மஞ்சள் சேர்த்து அரைத்து தடவி வந்தால் , படர்தாமரை சொறி,சிரஙகு நுண்புழு ஒழியும்.

அறுகம்கட்டை  கணு நீக்கி ஒரு பிடியெடுத்து அதனுடன் பதிமுன்று  மிளகு சேர்த்து இடித்து அரைப்படி நீர்விட்டு அரை அழக்காக சுண்டும் படி கஷாயம் இட்டு சாப்பிடவும். இப்படி காலை, மாலை இரண்டு வேளையும் பாத்து நாள் சாப்பிட்டால் மேகசுரம் , உடம்பு சூடு முதலியன நீங்கும்.

மாட்டு சாணியை உருண்டையா பிடித்து அதற்கு பொட்டு வைத்து அதன் தலையில்  அருகம்புல்லைச்செருகி வைத்தால் சில நாள் சென்று சாணி  சுக்கலாக காய்ந்து இருக்கும். இதற்கு காரணம்  அறுகம்புல்லின் வேர் பாகத்தில் இருக்கும் கிருமி நாசிணி சாணியில் இருக்கும் அசுத்த கிருமிகளை வேதியல் மாற்றத்தால் நீக்கி சுத்தப்படுத்துகிறது

இதையே மற்றொரு சாணியில் அறுகம்புல் செருகாமல் வைத்தால் அவற்றில் புழுபுழுத்து உதிர்ந்து காணப்படும். இவற்றில் இருந்து அறுகம்புல்லுக்கு எந்த அளவிற்கு மருத்துவ குணம் உண்டு என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டும்.

அறுகம்புல்லின் கணு பாகம் நச்சு தன்மையுடையது எனவே இதை நீக்கிப் பயன படுத்த வேண்டும் என்பது மருத்துவ விதியாகும்.

 

Tag; arugampul medicinal  அறுகம்கட்டை  அறுகம்புல்  அறுகம்புல் இராஜ மூலிகையாகும்  அறுகம்புல் நோய்களை வேருடன்  அறுகம்புல்லின்  அறுகம்புல்லின் ஊறல் அறுகம்கட்டை  அறுப்பதால்  கண்நோய்  குருதியழல்  தலை நோய்· இவை நீங்கும்  நீரையும் கண் புகைச்சல்  நோய்களை வேருடன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...