அம்மாமக்கள் முன்னேற்றக் கழகத்தை மன்னார்குடி மாபியா என்றுதான் கருதுவதாக துக்ளக் ஆசிரியரான, ஆடிட்டர் குருமூர்த்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி, அதிமுகவுடன்-சசிகலா இணைந்து செயல்படவேண்டும் என்ற தொனியில், பேசியதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில்தான், குருமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதை பாருங்கள்:1987ம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ராஜீவ் காந்தி அரசின் ஊழல்களை அம்பல படுத்த சந்திரா சாமி உதவியை நாடியது. சந்திராசாமி நல்லவர் இல்லை என்றபோதிலும் இந்த விஷயத்தில் அவரது உதவியை பெற்றது பற்றி அருண்ஷோரி இப்படி ஒருவிளக்கம் அளித்தார்: தீ பற்றிக்கொண்டு எரியும் போது கங்கை நதிக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. சாக்கடை நீரையும் அள்ளிவீசி நெருப்பை அணைக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது என்றார்.
துக்ளக் ஆண்டு விழாவின்போது பாஜக-அம்மா முன்னேற்ற கழகம் மற்றும் அழகிரி ஆகியோருடன் இணைந்து திமுகவை எதிர்க்குமா என்று என்னிடம் கேள்வி எழுப்பப் பட்டது. அப்போது இந்த உதாரணத்தை நான்பதிலாக சொன்னேன். பாஜக என்ன செய்யப்போகிறது என்பது எனக்குதெரியாது. ஆனால் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்பது துக்ளக் இதழ் நிலைப்பாடு. ஒருவேளை.. வாசகர் என்னிடம் கேட்டதைப்போல பாஜக மற்றும் அதிமுக கட்சிகள், நாம் யாரை சாக்கடை நீர் என்று கருதுகிறோமோ, அவர்களின் ஆதரவை பெறுமானால், அப்போதுஅதை துக்ளக் ஆதரிக்காது.
எனவே அம்மாமக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு, நான் ஆதரவுதருவதாக எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? அமமுக கட்சியை, யாரோ ஒருவர் கூறியதைபோல, நான் இன்னமும் மன்னார்குடி மாபியா என்று தான் கருதிவருகிறேன். ஒருவேளை பாஜக அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் கூட, மாபியா என்றுதான் அழைப்பேன்.
மன்னார்குடி மாபியாவை மாபியா என்று தான் துக்ளக் பார்க்கும். அதிமுகவை, திமுகபோல ஒரு குடும்ப கட்சியாக அந்தமாபியா மாற்றிவிடும் என்று துக்ளக் நம்புகிறது. எங்களுடைய கருத்து மாறப்போவது கிடையாது. நான் சொன்னது பற்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்திகள் வெளியாகி உள்ளதால் இந்தவிளக்கத்தை அளிக்கிறேன். சாக்கடை என்று வர்ணிக்கப்படும் சந்திராசாமிக்கு இணையாக கருதப்படும் ஒருவரை நான் எப்படி ஆதரிப்பேன்? எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ள பட்டுள்ளது. இவ்வாறு குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |