முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை பயிற்சி செய்யலாம்.
சந்தியா நேரம் எனப்படும் பகலும் இரவும் சந்திக்கும் காலை, மாலை வேளைகளில் தியானம் செய்வதால் அதிகமான நன்மை கிடைக்கும். அதிகாலையில் ஓசோன் படல அதிர்வுகள் தியானத்துக்கு உறுதுணையாக அமையும்.
தியானம் வெற்றியடைந்து பிறகு எந்த நேரத்திலும் தியானம் செய்யலாம். படிக்கும்போது தியானம் செய்யலாமா? இரவில் தியானம் செய்யலாமா? என்றெல்லாம் வினாக்கள் வரலாம்.
தியானத்தைப் புரிந்து மேற்கொள்பவர்களுக்கு காலமும் வேண்டியதில்லை. திசையும் வேண்டியதில்லை. அறிவை விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக் கூடிய ஒரு பயிற்சிதான் தியானம். இதற்கு காலம், நேரம், நாட்கள் பார்க்க வேண்டியதில்லை. எந்தக் காலத்திலும் செய்யலாம்.
நன்றி : பானுகுமார்
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.