தேவேந்திரகுள வேளாளர் சட்டத்திருத்த மசோதா வரவேற்கத்தக்கது

முதல் முறையாக தேவேந்திரா குலவேளாளர் என்ற ஒரு சமூகம், எஸ்.சி பிரிவில் இருந்து விலக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யபட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதாவது, தமிழகத்தில் மாநிலபட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியார் ஆகிய ஏழு உட்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு தேவேந்திரகுல வேளாளர் என பொதுப்பெயரிட வேண்டும் என்று அச்சமூகத்தினர் மற்றும் புதிய தமிழகம் கட்சி மற்றும் தலித் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்திவந்தன.

இதுதொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் தமிழக அரசு நியமித்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஏழு உட்பிரிவுகளை சேர்ந்தவர்களையும் இனி தேவேந்திரகுல வேளாளர் என பொதுபெயர் இட வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தெரிவித்தார். அதற்கு முன்னதாகவே கடந்த 2015ஆம் ஆண்டு நரேந்திரமோடி அவர்களை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் நேராக சந்தித்து தங்களது நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போது பிரதமர் நரேந்திரமோடி இச்சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை உணர்ந்து கொண்டதாக கூறியிருந்தார். குறிப்பாக இச்சமூகத்தினர் தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக உள்ளனர்.

தமிழகத்தில் அரசியல் ரீதியாக மிகமுக்கிய சமூகங்களில் ஒன்றாக கருதப்படும் இச்சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தமிழக அரசு தொடர்ந்து கூறிவந்தது. இந்நிலையில் தமிழகரசின் இந்த பரிந்துரையை ஏற்று, இந்த 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என பொதுப் பெயர் இட வகைசெய்யும் சட்ட திருத்த மசோதாவை, மக்களவையில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் இந்த மசோதா தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அமர்வில் விவாதத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அவைகளில் விவாதத்திற்குப்பின் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்றபின் சட்டமாகும்.

இந்நிலையில் இச்செய்தியை மேற்கோள்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துபதிவிட்டுள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தேவேந்திரகுல வேளாளர் என்ற சமூகம் எஸ்.சி பிரிவிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதும், அதை ஏற்று ஏழு பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுள வேளாளர் என அழைக்கும் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதும் வரவேற்கத்தக்கது என கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...