அருகன்புல்லின் மருத்துவ குணம்

 அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக மரத்தின் உள்பட்டை இவைகளையெல்லாம் அம்மியில் வைத்து அரைத்து, காலை, பகல், மாலை என்று மூன்று வேளை, நெல்லிக்காயளவு சாப்பிட்டு சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும்.

அருகம்புல்லை ஊறவைத்து கியாழம் வைத்து, பாலுடன் சேர்த்து உட்கொள்ள, மூல இரத்தம், நீரடைப்பு, நீர்த்தாரை எரிச்சல் நீங்கும். அருகம்புல்லை, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டிச் சாற்றைக் கண்ணுக்குள் பிழிய கண்நோய், கண்புகைச்சல் போகும்.

மூக்கிலிட இரத்த பீனிசமும், காமய்பட்ட இடத்தில் பூச, இரத்தம் வடிதலும் நிற்கும். புண்கள் மீது தடவ, புண்கள் ஆறும். வெள்ளிக்கிழமைகளில் 15 முதல் 30 மில்லி. குடித்து வர பெருச்சாளிவிடம் நீங்கும்.

அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் தடவி வர சொறி, சிரங்கு, படர் தாமரை கிருமிரோகம், சீதபித்தம் நீங்கும்.

இதன் வேரை கணுக்கள் போக்கி 10 கிராம் எடுத்து அத்துடன் வெண்மிளகு 10 எடுத்து சேர்த்து, கஷாயமிட்டு வடித்து அதில் பாக்கு அளவு பசுவின் வெண்ணெய் கூட்டி உட்கொள்ள மருந்தின் வேகம், இரசவேக்காடு, மூலக்கடுப்பு, நீர்க்கடுப்பு, நீரடைப்பு (கல்) வெட்டை மூத்திர தாரை எரிச்சல் முதலியவை நீங்கும். பெரும்பாடு பூரணமாக குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...