உங்களுடைய தோல்வியும்கூட ஒரு வெற்றியாகவே கருதப்படும்

நீங்கள் ஈடுபட்டுவரும் ஆராய்ச்சிகளில் நீங்கள் முழுமையாக வெற்றிபெறாமல் இருக்கலாம், ஆனால் உங்களுடைய தோல்வியும்கூட ஒரு வெற்றியாகவே கருதப்படும். ஏனென்றால் நீங்கள் அதிலிருந்து ஏதாவது கற்றுக்கொள்வீர்கள் என்பதே அதற்கு காரணம்.

சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கை மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவற்றுடன் நீங்கள் பணியாற்ற வேண்டுமென கரக்பூர் ஐஐடி பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். (ஐஐடி) கரக்பூரில் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் 66வது ஆண்டு மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அந்நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் மேற்குவங்க ஆளுநர், மத்திய கல்விஅமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பட்டம்பெற்ற மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், உங்கள் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டியது மட்டுமல்லாமல், நிகழ்காலத்திலும் ஒரு கண் வைத்து, நமதுதேசத்தின் எதிர்காலத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

இன்டர்நெட் ஆப்திங்ஸ் மற்றும் மாடன் கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜியிலும் ஐஐடி கரக்பூர் பாராட்டத்தக்க பணிகளை செய்துவருகிறது, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஐஐடி கரக்பூர் மென்பொருள் துறையின் கண்டுபிடிப்புகள் நாட்டிற்குபயனுள்ளதாக இருந்தது, இப்போது ஹெல்த்டெக்கின் எதிர்கால தீர்வுகளில் வேகமாக செயல்படவேண்டிய அவசியம் உருவாகி உள்ளது. சூரிய ஒளியை மிகக்குறைவாக பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா உள்ளது, ஆனால் வீட்டுக்கு வீடு சூரியசக்தியை வழங்க இன்னும் பலசவால்கள் உள்ளன, இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கமுடியும், நீடித்த மற்றும் மக்கள் அதை எளிதாக பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் இந்தியாவுக்குதேவை. 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் நிலைமை மாறிவிட்டது, தேவைகளும் மாறிவிட்டன, அபிலாஷைகளும் மாறிவிட்டன, இப்போது ஐஐடிகள் இந்தியதொழில்நுட்ப நிறுவனங்கள் மட்டுமல்லாமல் உள்நாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களில் விஷயத்தையும், அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல வேண்டும்.

நீங்கள் ஈடுபட்டுவரும் ஆராய்ச்சிகளில் நீங்கள் முழுமையாக வெற்றிபெறாமல் இருக்கலாம், ஆனால் உங்களுடைய தோல்வியும்கூட ஒரு வெற்றியாகவே கருதப்படும். ஏனென்றால் நீங்கள் அதிலிருந்து ஏதாவது கற்றுக்கொள்வீர்கள் என்பதே அதற்குகாரணம். நீங்கள் இந்த வளாகத்தை விட்டு வெளியேறும்போது நீங்கள் உங்கள் புதியவாழ்க்கையை தொடங்கவேண்டும் என்பது மட்டுமல்லாமல், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றும் ஸ்டார்ட் அப்களை உருவாக்கவேண்டும். இதோ நீங்கள் உங்கள் கையில் வைத்திருக்கிற பட்டம், பதக்கம் இது மில்லியன் கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு, அதைநீங்கள் நிறைவேற்ற வேண்டும். மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவர நீங்கள் ஒருதொடக்கத்தை முன்வைக்க வேண்டும், உங்கள் திறனை உணர்ந்து நீங்கள் முன்னேறவேண்டும், எதிலும் முழு நம்பிக்கையுடன் செல்லவேண்டும். கொரோனா காலத்தில் ஐஐடிகள் உருவாக்கிய தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கு மிகப்பெரும் உதவியாக இருந்தது.

அதேநேரத்தில் உத்தகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட பெருந்ததுயரம் குறித்து விவரித்த அவர், பேரழிவை சமாளிக்கும் வகையில் நமது உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம்செலுத்த வேண்டும் எனக் கூறினார். காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படும் இயற்கை பேரழிவுகள் உலகிற்கு ஒருபெரிய சவாலாக அமைந்துள்ளன, இதுபோன்ற சூழ்நிலையில் பேரழிவின் விளைவுகளை எதிர் கொள்ளும் திறன்கொண்ட ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

One response to “உங்களுடைய தோல்வியும்கூட ஒரு வெற்றியாகவே கருதப்படும்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...