வறுமையில் வாடும் மக்களே எனது நண்பர்கள்

மாநில வளர்ச்சிக்காக, மக்கள் மம்தாவை நம்பியிருந்தனர். ஆனால், மக்கள் முதுகில் குத்திவிட்டார் என்றும் மாநிலத்தில் வளர்ச்சிக்கு எதிரானசதி நடக்கிறது என்றும் மேற்குவங்கத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

கோல்கட்டாவில் நடந்த பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சியை திரிணமுல் காங்கிரஸ் நிறுத்திவைத்துள்ளது. இதனால், வளர்ச்சிநோக்கி நகர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். பா.ஜ.,வும் சிறந்த நிர்வாகமும்தான் மே.வங்கத்திற்கு தேவைப்படுகிறது. இதற்குமுன்னர், இது போன்ற கூட்டத்தினர் மத்தியில் பேசியது இல்லை.

மாநிலம் வளர்ச்சி பெறுவதற்கு மம்தாவை மக்கள் நம்பியிருந்தனர். ஆனால், மம்தா முதுகில் குத்திவிட்டார்.மாநில மக்கள்மீது மம்தாவின் ஆட்கள் அடக்குமுறையை ஏவிவிட்டனர். ஆனால், அவர்களால், மாநிலத்தின் நம்பிக்கையை புதைக்க முடியவில்லை. வளர்ச்சி, அமைதியையே மே.வங்கம் விரும்புகிறது.பா.ஜ.,விற்கு ஆசிவழங்க மக்கள் விரும்புகின்றனர். இதுவரை எந்த அரசும் செய்யாததை நாங்கள் செய்து முடிப்போம். மாநில வளர்ச்சிக்கு சிலர் தடையாக உள்ளனர். மம்தா கமிஷன் அரசாங்கம் நடத்தி வருகிறார்.லட்சகணக்கானோருடன் பா.ஜ., தொடர்பில் உள்ளது.மாநிலம் வளர்ச்சிபெற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கம் ஆகும்.இந்தமண்ணின் மைந்தன் மிதுன் சக்ரவர்த்தி நம்முடன் உள்ளார்.

இந்த தேர்தலில்,திரிணமுல், இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகியவை உள்ளன. அவர்கள் மாநிலவிரோத போக்கு கொண்டவர்கள். இந்தகட்சிகள் மாநில வளர்ச்சியை விரும்பவில்லை. ஆனால் மக்கள் வளர்ச்சியை நோக்கி காத்திருக்கின்றனர் . தேர்தல்முடிவுகள் குறித்து யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை.உங்கள் மனதைவெல்ல நாங்கள் கடுமையாக உழைப்போம். மாநில வளர்ச்சி, அதிகமுதலீடு, மாநிலத்தின் கலாசாரத்திற்கு பாதுகாப்பு மற்றும் மாற்றத்தை கொண்டு வருவோம் என உறுதி அளிக்கவே இங்கு வந்துள்ளேன்.

இந்த தேர்தல், அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிக்கு வழிவகுப்பதாக அமையும். அனைத்து துறைகளிலும் மாநிலம் வளர்ச்சிபெறும்.மே.வங்க மக்கள். உங்களை அக்கா என அழைத்தனர். ஆனால், நீங்கள் உங்களது உறவினருக்குமட்டும் அத்தையாக உள்ளீர்கள். இதனைதான் உங்களிடம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மாநிலத்தில் பெண்கள், மூதாட்டிகள் தாக்கப்படுவது குறித்து நீங்கள் அறிவீர்கள். சமீபத்தில், 80 வயது மூதாட்டி தாக்கப்பட்டதன், மூலம் உங்களின் உண்மைமுகத்தை மக்கள் நன்கு அறிவார்கள்.

மம்தா, உங்களது ஸ்கூட்டி பவானிபூர் செல்லாமல் நந்திகிராம் சென்றீர்கள். யாரும் காயப்படுவதை நான் விரும்பவில்லை. உங்களது ஸ்கூட்டி, செல்லவேண்டிய இடம் செல்லாமல், கீழேவிழுந்தால் என்ன செய்வீர்கள். நந்திகிராமில் மம்தா தோல்வி அடைய போகிறார்.

நான் எனது நண்பர்களுக்காக உழைப்பதாக என்னை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். நாம், இளமைகாலத்தில் நமது நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து வளர்ந்துள்ளோம். நான் வறுமையில் வளர்ந்தவன். வறுமையில்வாடும் மக்களே எனது நண்பர்கள். இதனால், நாட்டின் ஒவ்வொரு மூளையிலும் வசிக்கும் ஏழை மக்களின் பிரச்னைகள் குறித்து எனக்கு தெரியும். அவர்களுக்காக நான் தொடர்ந்து உழைப்பேன். இதையாராலும் தடுக்க முடியாது. விவசாயிகளுக்கான நிதியுதவியை மம்தா தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆளுங்கட்சியினர், ஏராளமான முறைகேடுகளை செய்ததுடன், மக்களின்பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். புயல் நிவாரணத்திற்காக அனுப்பிய பணத்தைகூட கொள்ளையடித்து உள்ளனர். ஏராளமான ஊழல் செய்துள்ளனர்கள். மக்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தையும் அவர்களின் வாழ்க்கையுடனும் நீங்கள்விளையாடி உள்ளீர்கள்.

மம்தாவை எனக்கு நீண்டகாலமாக தெரியும். இடதுசாரிகளுக்கு எதிராக குரல் எழுப்பிய மம்தா, தற்போது இல்லை. தற்போது வேறுஒருவரின் குரலில் பேசி வருகிறார். வளர்ச்சிக்கு பதில், மாநிலத்தை தனிமைபடுத்தி விட்டீர்கள். இதனால், மாநிலத்தில் தாமரை மலரும். மதத்தின் பெயரால், நீங்கள் மக்களை பிரித்துள்ளீர்கள். இதனால், இங்குபா.ஜ., ஆட்சிமலர்வது உறுதி.

பயமின்றி பா.ஜ.,வுக்கு ஓட்டு போடுங்கள். மோசமான நிர்வாகத்திற்கு எதிராக ஓட்டளியுங்கள். பயம், ஊழல் ராஜ்ஜியத்தை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பா.ஜ.,வுக்கு ஓட்டளித்து, பயத்தில் இருந்து மாநிலத்தை விடுவியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் பிரபல வங்கமொழி நடிகரும் திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் எம்பியும் மிதுன் சக்கர வர்த்தி இன்று பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.அவருடன் வேறு சில நாட்டுப்புற கலைஞர்களும் பாடகர்களும் பாஜகவில் இணைந்தனர்.

70 வயதாகும் மிதுன் சக்கரவர்த்தி கடந்த 2014ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ்சார்பில் மாநிலங்களை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் விளம்பர தூதராக இருந்தார். இதற்காக அவர்பெற்ற ரூபாய் 1.2 கோடி குறித்து அமலாக்கதுறை விசாரணை நடத்தியது.

இதையடுத்து அந்த தொகையை அமலாக்க துறையினருக்குத் திருப்பிஅளித்த மிதுன் சக்கரவர்த்தி தனது எம்பி பதவியையும் ராஜனினமா செய்தார். அதன்பின்னர் இத்தனை நாட்கள் அரசியலிலிருந்து விலகியே இருந்த மிதுன் சக்கரவர்த்தி, தற்போது பாஜகவின் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...