25 ஆண்டுகளில் வளர்ச்சிபெற்ற நாடாக மாற்ற மாணவச் செல்வங்கள் உதவவேண்டும்

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ச்சிபெற்ற நாடாக மாற்ற மாணவச் செல்வங்கள் உதவவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தினார்.

சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள மத்தியபிரதேச மாநிலத்துக்கு நேற்று முன்தினம் பிரதமர் மோடி சென்றார். குவாலியர் நகரில் உள்ள சிந்தியா பள்ளியின்125-வது நிறுவன தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: குவாலியர் எனக்கு மிகவும் பிடித்த நகரம். அந்நகருக்கு வரும்போது நான் கூடுதல்மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாப்பதில் மாதவராவ் சிந்தியாவின் குடும்பம் நமது நாட்டுக்கு பெரும்பங்காற்றியுள்ளது. நமது நாட்டின் இளைஞர்மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நமது பாரதநாடு நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. குவாலியர் நகரில் உள்ள மாணவர்களுக்கு முழுமையான கல்வியை சிந்தியாபள்ளி வழங்கி வருகிறது.

நாம் நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. நமதுநாடு வேகமாக வளர்ச்சி பெற்றுவருகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் நமது நாட்டை வளர்ச்சி பெற்றநாடாக மாற்ற மாணவர்கள் உதவவேண்டும். இதற்கான முயற்சியில் மாணவச்செல்வங்கள் ஈடுபட வேண்டும். தரமான கல்வி பயிலும் மாணவர்கள் நமதுநாட்டின் எதிர்காலச் செல்வங்கள் என்பதை அனைவரும் அறிவர். நாட்டின் நலனை மனதில் நிறுத்தி பயிலும் அவர்கள் நாடுவளம்பெற வளமான வழியைக் காட்டுவார்கள்.இளைஞர்கள் மீதும், அவர்களது செயல் திறன்கள் மீதும் நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் நாடு வளமானநாடாகவும், வளர்ச்சிபெற்ற நாடாகவும் மாற தீர்மானம் செய்துள்ளோம்.

நமது நாடு எடுத்துள்ள தீர்மானத்தை இளைஞர்கள் நிறை வேற்றுவார்கள் என நம்புகிறேன். அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவைப் போலவே மாணவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. சிந்தியாபள்ளியின் ஒவ்வொரு மாணவரும் வளர்ந்தஇந்தியா என்ற இலக்கை அடைய முயற்சிசெய்ய வேண்டும்.

எனவே, மாணவச் செல்வங்கள் இன்று முதல் ஒருதீர்மானத்தை மனதில் கொண்டு அதை நோக்கி செயல்பட வேண்டும். எடுத்தகாரியத்தை முடிப்போம் என்ற மன உறுதியுடன் மாணவர்கள் நடக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...