ஒரே பாரதம் உன்னத இயக்கம்

மத்திய அரசின் ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கம், மாநிலம்,  யூனியன் பிரதேசங்களை இணைத்தல், அனுபவக் கற்றல் என்ற கருத்தாக்கத்தின் மூலம் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேச மக்களிடையே பரஸ்பர புரிதலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொழிக் கற்றல், கலாச்சாரம், பாரம்பரியம், இசை, சுற்றுலா, உணவு வகைகள், விளையாட்டு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற துறைகளில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு இடையே நீடித்த மற்றும் கட்டமைக்கப்பட்ட கலாச்சார தொடர்பை மேம்படுத்துவதற்காக 16 அமைச்சகங்களும், துறைகளும் அதற்கான நடவடிக்கைகளை ஆண்டு முழுவதும் மேற்கொள்கின்றன.

இதில் இளையோர் சங்கம் என்பது ஒரு தொடர்ச்சியான கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றமாகும். இதில் பங்கேற்பவர்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழி, இலக்கியம், உணவு வகைகள், திருவிழாக்கள், மரபுகள், கலை வடிவங்கள், கட்டடக்கலை, பொறியியல் மற்றும் வரலாற்று சிறப்பு அம்சங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.

காசி தமிழ்ச் சங்கமம் மூலம் பழங்கால இந்தியாவின் இரண்டு புகழ்பெற்ற மையங்களான தமிழ்நாடு மற்றும் காசி இடையேயான வரலாற்று தொடர்புகளைக் கொண்டாடுவதற்கும், வலுப்படுத்துவதற்கும் இரண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் சுமார் 3,900 தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு 8 நாள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டனர். இதன் கீழ் கருத்தரங்குகள், செயல்முறை விளக்கங்கள், கலாச்சார பரிமாற்றங்கள், கைத்தறி, கைவினைப்பொருட்கள், உணவு வகைகள், தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் வரலாற்று அடையாளங்களை வெளிப்படுத்தும் கண்காட்சிகள் ஆகியவை இடம் பெற்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.ம� ...

குற்றங்கள் அதிகரிப்புக்கு தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்கணும்: நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் குற்றங்கள் 52% அதிகரித்துள்ளன. மாநில அரசு இதற்கு ...

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வத ...

பாகிஸ்தானிடம் அணு ஆயுதம்; சர்வதேச அமைப்புக்கு ராஜ்நாத் கேள்வி ''பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்களை சர்வதேச அணு சக்தி ...

ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ரா� ...

ஜம்மு காஷ்மீர் புறப்பட்டார் ராஜ்நாத் சிங் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புத்துறை ...

புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோ ...

புதிய ஏவுகணை பார்கவ அஸ்திரம் சோதனை வெற்றி கொத்து கொத்தாக வரும் ட்ரோன் படைகளை தடுத்து அழிக்கும் ...

2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முட� ...

2026க்குள் மாவோயிஸ்டுகளுக்கு முடிவு கட்டுவோம்; அமித்ஷா மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள கரேகுட்டா மலையில் மூவர்ணக் கொடி ...

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏ� ...

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரிப்பு கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...