இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

 இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு செழித்துத் தரையோடு தரையாகப் படரும் சிறிய கொடியினத்தை சார்ந்ததாகும் இது. தரைமட்டத்திற்கு மேல் ஓர் அடி வரை வளர்ந்து காணப்படும்.

இந்தச் செடியின் இலைகள் மட்டுமன்றி, வேர் மற்றும் வேர்ப்பட்டை அனைத்துமே மருத்துவ பயன் கொண்டதாகும். இந்தச் செடியின் ஒவ்வொரு பாகமும் கபத்தை அகற்றும் தன்மை கொண்டதாகும்.

அதிகப்படியான கபத்தாலும், ஈளை, இருமல் போன்றவையாலும், பித்த காசம் முற்றிய நிலையில் ஏற்படும் இரத்த வாந்தியாலும் துன்புருபவர்களுக்கு நல்ல மருந்தாகும்.

கிராமப்புறங்களில் இச்செடியின் வேரை இருமல் மட்டுமன்றி இரத்தம் கக்கும் நிலையிலுள்ளவர்களுக்கும் கொடுத்துக் குணமாக்கி விடுகிறார்கள்.

இன்புறா வேரின் மூலம் கபம் சம்பத்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தி விடலாம். பித்தத்தின் அதிகரிப்பால் ஏற்படும் தொல்லைகளும் குணமாகும். காசநோய், ஈளை, மற்றும் பித்தசுரம், வயிற்றுப் பொருமலுடன் இரைச்சல் போன்றவை குணமாகும்.

இன்புறா இளைச்சாற்றைச் சுரத்தின் கொடுமையால் துன்புருவோரின் உள்ளங்கை, பாதங்கள் முதலிய அவயங்களில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும்.

இந்தச் இலைச் சாற்றுடன் பசுவின் பாலைக் காய்ச்சி ஆற வைத்துக் கலந்து உட்கொள்ள நெஞ்செரிச்சல் குணமாகும்.

இன்புறா இலைகளுடன் வல்லாரை இலைகளையும் சம அளவில் எடுத்துச் சுத்தம் செய்து ஒன்றாகச் சேர்த்து இட்டு இடித்து ஒரு மண்சட்டியிலிட்டு மூன்று டம்ளர் தண்ணீர் வைத்துக் கொதிக்க வைத்துப் பாதியளவாக வற்ற வைத்துத் தினமும் மூன்று வேளை பருகி வர ஆஷ்துமா, காசநோய், ஈளை, இருமல் இவை குணமாகும்.

இன்புறா வேர்ப்பட்டையை அம்மியில் வைத்துப் பசுவின் பால்விட்டு நன்கு அரைத்து வைத்துக்கொண்டு அதன்பினர் பசும்பாலில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு இதனுடன் போதிய அளவு கற்கண்டையும் சேர்த்துப் பின்னர் சிறிய கடாயில் விட்டுக் கொதிக்க வைக்கும் போது கிண்டிக் கொடுக்க வேண்டும்.

இவ்விதம் செய்தால் லேகியப் பதத்தை அடையும். இந்த லேகியத்தைத் தினமும் இரண்டு வேளை உட்கொண்டால் வாந்தி, இருமல், காசநோய் போன்றவை குணமாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட� ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா� ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற� ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த� ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற� ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...