தேசிய மாணவர் படையில் இணையுங்கள் – பிரதமர் மோடி அழைப்பு

 ‘என்.சி.சி.,யில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம்’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

116 வது மான்கி பாத் ரேடியோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவுக்கு கயனா நாட்டிற்கும் இடையிலான கலாசாரம் மற்றும் ராஜதந்திர உறவுகள் வலுவாக உள்ளது. இந்தியாவில் இருந்து நீண்ட தொலைவில் இருக்கும் கயானாவில் ‘மினி பாரத்’ உள்ளது. சுமார் 180 ஆண்டுக்கு முன், இந்தியர்கள் கயானாவிற்கு வயல்களில் வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர். இன்று கயானாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளனர்.

என்.சி.சி., எனப்படும் தேசிய மாணவர் படையில் அதிகமான இளைஞர்கள் இணைய வேண்டும். வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியம். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் ஆற்றல், திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பு அவசியம். தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான ஜனவரி 12ம் தேதி, அவரது 162வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி மாபெரும் இளைஞர்கள் மாநாடு நடத்தப்படும். அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களை அரசியலுடன் இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இளைஞர்கள் மாநாடு நடத்தப்பட உள்ளது.

சிட்டுக்குருவிகளை பாதுகாக்க தமிழகத்தில் நடைபெறும் முயற்சிக்கு பாராட்டுக்கள். சென்னையில் உள்ள கூடுகள் என்ற தன்னார்வ அமைப்பு, மாணவர்கள் உதவியுடன் கூடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மரத்தால் ஆன கூடுகளை தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களின் வெளிப்புறங்களில் கூடுகள் பொருத்தப்படுகின்றன. சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய இந்த கூடுகள் பெரும் உதவியாக உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப் ...

தமிழகத்தை மீட்போம் நாட்டை காப்போம் பாசத்துக்குரிய பாஜக.,வின் என் அருமைத் தாமரை சொந்தங்களே உங்கள் ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்ல ...

தமிழக மக்களிடம் தொடர்பில் இல்லாத முதல்வர் – அண்ணாமலை ''முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contactல் ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கி ...

ஏப்ரல் 22-ல் சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர் ...

துணை ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் ரவி ஆலோசனை டில்லி சென்றுள்ள கவர்னர் ரவி, துணை ஜனாதிபதி ஜெகதீஷ் ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீத ...

யுனேஸ்கா பதிவேட்டில் பகவத் கீதை பிரதமர் மோடி பெருமிதம் 'யுனெஸ்கோ' உலக நினைவகப் பதிவேட்டில், ஸ்ரீமத் பகவத் கீதை ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோ ...

எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...