நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றைத் தவிர்த்து விட வேண்டும்.
தினமும் 500 மி.லி.க்கும் அதிகமான நீரைப் பருக வேண்டும்.
புரோட்டீன் :
சிறுநீர் குறைவாகச் செல்கின்றவர்களுக்குப் புரோட்டீன் உணவு வகைகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. தினமும் சிறுநீர் அளவு 5௦௦ முதல் 800 மிலி என்ற அளவில் இருக்கின்றபோது இவர்கள் தினமும் 0.5 கிராம் முதல் 0.75 கிராம் வரை ஒரு கிலோ உடல் எடைக்குப் புரோட்டீனைச் சேர்த்துக் கொள்ளலாம். சிறுநீர் எப்போதும் போல செல்லுமாயின் இவர்கள் எப்போதும் போல புரோட்டீனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கொழுப்பு ;
தினமும் 40 முதல் 55 கிராம் வரை கொழுப்பு உணவைச் சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால், இவைகளின் வெளியேற்றத்திற்குச் சிறுநீரகம் தேவைப்படாது.
கார்-போ-ஹைட்ரேட்:
கார்-போ-ஹைட்ரேட் மற்றும் வைட்டமுங்களை எப்போதும் போல எடுத்துக் கொள்ளலாம்.
கலோரி :
'கலோரி' அளவைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை.
உப்பு :
"சோடியாத்தின்" (உப்பின் அளவை) அளவைக் குறைப்பது நல்லது. உடலில் வீக்கம், நீர் சரியாக போகாமல் இருத்தல், இரத்த அழுத்தம் போன்றவற்றில் உப்பின் அளவை, வெகுவாகக் குறைக்க வேண்டும். இதே போன்றே "பொட்டாசியத்தின்" அளவையும் குறைக்க வேண்டும். (பச்சைக் காய்கறிகள், இளநீர்)
சிறுநீரகம் செயலிழக்கும் போது தவிர்க்க வேண்டியவை:
உடல் வீக்கம், இரத்த அழுத்தம், சிறுநீர் செல்லாமை ஆகயவை இருக்குமாயின்…
உணவில் உப்பைக் (சோடியத்தை) குறைக்க வேண்டும்.
உப்பு சேர்ந்த பிஸ்கட், வெண்ணெய், அப்பள வகைகள், ஊறுகாய், இறைச்சி ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பொட்டாஷியத்தையும் குறைக்க வேண்டும்.
புரோட்டீன் ;
தினமும் சாப்பிடுகின்ற புரோட்டீனின் அளவு 40 கிராமாக இருக்கலாம். இதில் பாதி முதல் தரமானதாக இருக்க வேண்டும். புரோட்டீனின் கொடுக்கும் அளவு இரத்தத்தில் யூரியாவின் அளவைப் பொறுத்து அமைய வேண்டும் புரோட்டீன் கார்-போ-ஹைட்ரேட் அளவு 0.3 முதல் 0.5 கிராம் வரை ஒரு கிலோ எடைக்குத் தரலாம்.
நன்றி : டாக்டர் முத்துச் செல்லக்குமார்
You must be logged in to post a comment.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
2telescope