இந்திய இளைஞர்கள் உலக நன்மைக்கான சக்தி – பிரதமர் மோடி பெருமிதம்

‘இந்தியாவின் இளைஞர்கள் இல்லாமல் உலகின் எதிர்காலத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதனால்தான் நான் உங்களை உலக நன்மைக்கான சக்தி என அழைக்கிறேன்,’ என்று பிரதமர் மோடி கூறினார்.

டில்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். தொடர்ந்து நடந்த விழாவில் அவர் பேசியதாவது:

தற்போது இந்திய இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் உலகம் முழுவதும் எந்த வளர்ச்சியையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. கடந்த பல்லாண்டுகளாக நாட்டின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் தடைகளை அகற்றுவதற்கு மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

கடந்த ஆண்டுகளில் என்.சி.சி.,யின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பணியாற்றியுள்ளதில் நான் திருப்தி அடைகிறேன். ‘ஒரு தேர்தல், ஒரு நாடு’ என்பது இளைஞர்களின் எதிர்காலத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதால், அது குறித்த விவாதத்தைத் தொடருமாறு என்.சி.சி.,, என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மற்றும் இளைஞர்களை வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு மாதமும் தேர்தல்கள் நடத்தப்பட்டால், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் படிக்க மாணவர்களுக்கு எப்படி நேரம் கிடைக்கும்?

‘விக்சித் பாரத்’ என்ற நோக்கத்தில் கவனம் செலுத்துமாறு என்.சி.சி., மாணவர்களுடன் சேர்ந்து நாட்டின் இளைஞர்களையும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இது இந்தியாவை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லவும், சர்வதேச அளவில் ஒரு நாடாக வளரவும் உதவும்.

2014ம் ஆண்டில், தேசிய மாணவர் படையில் 14 லட்சம் பேர் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 20 லட்சத்தை எட்டியுள்ளது. அவர்களில் 8 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இருப்பது பெருமைக்குரியது.

இந்தியாவின் இளைஞர்கள் இல்லாமல் உலகின் எதிர்காலத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதனால்தான் நான் உங்களை உலக நன்மைக்கான சக்தி என்று அழைக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...