விண்வெளியில் சரித்திரம் படைத்தது இந்தியா

விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம், செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைத்த 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்தது.

சர்வதேச விண்வெளி மையத்தைப் போல, வரும் 2035ம் ஆண்டுக்குள் தனி விண்வெளி மையத்தை அமைக்க இந்தியா முயற்சித்து வருகிறது. மேலும், ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்ட பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இத்தகைய பணிகளுக்கு, விண்வெளியில் இரு விண்கலன்களை இணையச் செய்யும் டாக்கிங் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். இதற்கான முன்னோட்டமாக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட் மூலம் அனுப்பிய இரு செயற்கை கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது.

தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய இந்த ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் முதலில் ஜனவரி 7ம் தேதி இணையச் செய்வதற்கு திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் ஒருங்கிணைக்கும் திட்டம் தள்ளிப்போனது. தொடர்ந்து, அனைத்து சென்சார்களும் மதிப்பீடு செய்யப்பட்டு, படிப்படியாக, ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை இணைப்பதற்கான தூரம் குறைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இன்று (ஜன.,16) விண்வெளியில் இரண்டு செயற்கைகோள்களை இணைக்கும் ‘டாக்கிங்’ செயல்முறை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ‘விண்கலன்களை இணையச் செய்யும் வரலாற்று நிகழ்வு வெற்றி பெற்றுள்ளது. விண்வெளியில் டாக்கிங் செய்த 4வது நாடு இந்தியா,’ எனக் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து, செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணையச் செய்த 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது.

சரித்திர சாதனை படைத்த இந்திய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ புதிய தலைவர் நாராயணன் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...