எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் மூலம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒன் வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக்கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவு தளத்தில் இருந்து , இன்று காலை 9 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் மத்தியில் இஸ்ரோ தலைவர் திரு சோம்நாத் பேசுகையில்,

 

இந்த ராக்கெட் வெற்றிக்கு உழைத்த என்எஸ்ஐஎல், இஸ்ரோ மற்றும் ஒன் வெப் நிறுவனங்களுக்கு வாழ்த்துகள். செயற்கைக்கோள்கள் சரியான புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து பிஎஸ்எல்வி ராக்கெட் வரும் ஏப்ரல் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அடுத்தடுத்து ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் ஏவப்பட உள்ளன. இவ்வாறு  இஸ்ரோ பல முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளது என்றும் இது போன்ற வர்த்தக ரீதியான ஏவுதலுக்கு இஸ்ரோவுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதில் பயன்படுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட், இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திலும் பயன்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

*

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...