காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா என்பது தெரியவில்லை – அண்ணாமலை

” போலீஸ் ஸ்டேசன்கள் செயல்படுகின்றனவா அல்லது தி.மு.க.,வினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை,” என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சேலத்தை சேர்ந்த ஜான் என்ற ரவுடி, கொலை வழக்கில் ஜாமினில் வந்துள்ளார். இவர், ஈரோடு மாவட்டம் பவானி அருகே மனைவியுடன் சென்ற போது, காரில் துரத்திய 5 பேர் கொண்ட கும்பல் விபத்தை ஏற்படுத்தி வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: இன்று( மார்ச் 19), ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சட்டத்திற்கோ, போலீசாருக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. போலீஸ் ஸ்டேசன்கள் செயல்படுகின்றனவா அல்லது தி.மு.க.,வினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.

இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க முதல்வருக்கு அசிங்கமாக இல்லையா. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறு ...

இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை! இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்தை ...

ராணுவத்திற்கு உதவ தயார்

ராணுவத்திற்கு உதவ தயார் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய ராணுவ ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; � ...

போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோ� ...

போர் பதற்றம் உச்சம்; பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு துறை ஆலோசகர் ஆலோசனை போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் பிரதமர் ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை � ...

பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வ� ...

ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் – ராஜ்நாத் சிங் 'இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...