குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், அதிசாரம், குடலிரைச்சல், ஆசனக் கடுப்பு, சீதபேதி, சுவாசகாசம், பல் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை ஓமத்தினால் குணமாகும், இவையனைத்தையும் விடவும் வயிற்றுப் பொருமல், இரைச்சல் இவைகளுக்கு நல்ல மருந்தாகும்.
ஓமத்தைப் பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொண்டு மூன்றில் ஒரு பங்கு கறியுப்புச் சேர்த்துப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்விதம் பொடித்த ஓமத்தை வாயிலிட்டுச் சிறிதளவு ஆறிய வெந்நீரும் பருகி வர வயிற்றுப் பொருமல், இரைச்சல் இவை குணமாகும். வயிறு இறைந்து இறைந்து பேதியாவாதையும் ஓமக் கஷாயத்தின் மூலம் குணப்படுத்தி விடலாம்.
ஓமத்தை வறுத்துப் பொடித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வற்ற வைத்துப் பருக வேண்டும்.
ஓமம், சுக்கு, மிளகு, தனியா இவைகளை வறுத்து வைத்துக் கொண்டு தேங்காய்த்துருவலையும் சிறிது வறுத்துப் புளி குறைத்துக் குழம்பு வைப்பார்கள். இந்தக் குழம்பை வாரம் ஒருநாள் வைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப் பொறுமல், வயிற்று இரைச்சல் இவை ஏற்படாது. ஜீரணமாகாமல் இருந்தால் ஓமக் கஷாயம், ஓமம் வைத்து வறுத்தரைத்துத் தயார் செய்யும் குழம்பு நல்மருந்தாகும்.
ஓமத்தை ஓரளவு சூடு பொருக்க வறுத்துத் துணியில் கட்டி வைத்துக் கொண்டு மார்பிலும் முதுகிலும் ஒத்தடம் கொடுத்து வர ஆஷ்துமாவின் தொல்லை குறையக் காணலாம்.
ஓமத்தை ஒரு சிறிய துணியில் கட்டி முடிந்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு மூக்குத் துவாரம் வழியாகச் சிறிது நேரம் உறிஞ்சிக் கொண்டிருந்தாள் தும்மல் ஏற்பட்டு தலையிலுள்ள நீர் வெளியேறி விடும்.
ஓமம், திப்பிலி, ஆடாதோடையிலை, கசகசாத் தூள் இவைகளை வகைக்கு 20 கிராம் அளவு எடுத்து ஒரு மண்சட்டியில் இட்டுப் போதிய நீர் விட்டுக் கஷாயமாகக் காய்ச்சி தினமும் மூன்று வேளை பருகி வர ஆஷ்துமா குணமாகும்.
அஜீரணத்தைப் போக்க ஓமம் நல்ல மருந்தாகிறது. சிறிதளவு ஓமத்தையும், ஒரு சிட்டிகை அளவு உப்பையும் கலந்து பொடி செய்து உட்கொண்டு ஆறிய வெந்நீர் பருகவும். சிறிது நேரத்தில் பலன் கிடைக்கும்.
ஓமம், சுக்கு, அதிமதுரம், சிற்றதை, திப்பிலி, தேசாவரம் இவைகள் அனைத்திலும் ஒவ்வொன்றிலும் 15 கிராம் அளவு எடுத்து இடித்து ஏறக்குறைய ஒரு லிட்டர் அளவு நீரிலிட்டுக் கால் லிட்டராக வற்ற வைத்து இதனுடன் கருப்புக்கட்டிப் பாகு நன்றாகக் கலந்து இரண்டு தினங்கள் காலையிலும் மாலையிலும் பருகிட கடுமையான உழைப்பால் ஏற்படும் உடல் வலியைக் குணப்படுத்தும் நல்ல மருந்தாகும்.
ஓமம், நாய்க்கடுகு இவை ஒவ்வொன்றிலும் 25 கிராம் அளவு எடுத்துக் கொண்டு நன்றாக அரைத்து எடுக்கும் முன்னால் 75 கிராம் அளவு பனை வெல்லைத்தையும் வைத்து அரைத்து எடுத்துக் காலையிலும் மாலையிலுமாக மூன்று தினங்கள் சாப்பிட்டு வரப் பசியின்மையைப் போக்கலாம்.
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.