பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ராஜஸ்தானில் கன்ஹையாலால் என்ற தையற்காரர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். துணிதைக்க அளவு கொடுப்பதாக சொல்லிக் கொண்டு தையற்கடைக்குள் சென்ற ரியாஸ் மற்றும் முகமது என்ற இருநபர்கள் கன்ஹையா லாலை கடைக்குள்ளே வெட்டி படுகொலை செய்வதை அவர்களே வீடியோ எடுத்து சமூகவளைதளங்களில் பதிந்ததும் உள்ளது கொடூரசெயல். கன்ஹையாலால் நுபூர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவு செய்ததை அடுத்து இந்தபடுகொலை நடைபெற்றுள்ளது.
கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டாலும், ஏற்கனவே பல மிரட்டல்கள் விடப்பட்டிருந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு கன்ஹையாலாலுக்கு உரியபாதுகாப்பு அளிக்க தவறியது. கொடூரமான இந்த கொலைச்சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மதத்தின்பெயரால் சட்டத்தை கையிலெடுத்து, கொலைசெய்யம் உரிமை யாருக்கும் இல்லை. காட்டு மிராண்டித்தனமான இந்த கொடூரசெயலை செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்பதோடு மதத்தின்பெயரால் நடைபெறும் படுகொலைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |