வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தனித் தீர்மானத்தை கொண்டுவந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து, தீர்மானத்தின் மீதான தங்களின் நிலைபாட்டினை தெரிவித்து தமிழக பேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசினார்.
தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |