பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்; பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

பரபரப்பான சூழலில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ள சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக நடத்தியதற்கு முப்படைகளை பிரதமர் மோடி பாராட்டினார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. முப்படை தளபதிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே நேற்று விண்வெளி தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய வீடியோ இன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்த வீடியோவில் பிரதமர் மோடி பேசியதாவது: நிலவின் தென் துருவத்தில் நமது விண்கலம் தரையிறங்கியது மகத்தான சாதனை. பலரின் கனவுகளை சந்திரயான் நிலவுக்கு சுமந்து சென்றது. 34 நாடுகளுக்காக 400க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை நாம் விண்ணில் ஏவியுள்ளோம்.

இந்தியாவின் விண்வெளி பயணம் மற்றவருடன் போட்டியிடுவது அல்ல. பல்வேறு நாடுகளுடன் இணைந்து பொதுவான இலக்குகளைப் பகிர்ந்து கொள்கிறோம். செவ்வாய் கிரகத்தில் கால் பதித்து இந்தியா வரலாறு படைத்துள்ளது.

2023ல் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியா அமைக்க உள்ளது. இந்தியா- நாசாவின் கூட்டு நடவடிக்கையில் இந்திய வீரர் விரைவில் விண்வெளிக்கு செல்ல உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

பயணம் ஒத்திவைப்பு
தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக குரோஷியா, நார்வே, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய இருந்த நிலையில், அனைத்து வெளிநாட்டு பயணங்களும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

சந்திப்பு
இதற்கிடையே, ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். அப்போது பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்திய தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஜனாதிபதியிடம் விளக்கிக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...