குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு உறுப்பு உள்ளது. இந்த உறுப்பு நான்கு அங்குல நீளம் மற்றும் அரை அங்குல விட்டம் உடையது, ஒரு புழுவின் வடிவத்தில் பை போன்று இருக்கும்,

குடல்வால் இல்லாமல் மனிதனால் உயிர்வாழ இயலும் எனவே இது மனிதனின் உடலில் இருக்கும் ஒரு தேவையற்ற உறுப்பாக இதுவரை கருதப்பட்டது, ஆனால் தற்போது குடல்வால் மனிதனுக்கு பல மறைமுக நன்மைகளை செய்வதாக தெரியவருகிறது

டியூக் பல்கலைக்கழக பரிணாம உயிரியல் வல்லுநர்கள் இதன் பயனை-அண்மையில் தெரிவித்தனர்;

மனிதனின் உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் உண்டு . இவற்றில் நன்மை செய்யும் பேக்டிரியாக்கள் மற்றும் தீமை செய்யும் பேக்டிரியாக்கள் என இரண்டு உண்டு.

நன்மைசெய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைகிறது, மனித உடலுக்கு தீமை செய்யும் பாக்டீரியாக்களை விரட்டியடிக்கிறது. நன்மை செய்யும் பேக்டிரியாக்களை செழிக்க செய்வது கூட நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகமாக்குவதற்கு சமம்.

இவ்வாறு செழிப்படைந்த நன்மைசெய்யும் பேக்டிரியாக்கள் உயிர் படலங்களாக குடல்வாளை ஆக்கிரமித்து கொண்டு தீமைசெய்யும் பாக்டீரியாக்களை தடுக்கும் அரணாக செயல்படுகிறது. எனவே குடல்வால் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என அழைக்க படுகிறத

பெருங்குடலில் வசிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கழிசல், பேதி போன்ற நோய்களின் பொது வெளியேறிவிடுகின்றன. ஒரு-மண்டலம் ஆண்டிபயாட்டி மருந்து சாப்பிட்டபிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்கு தேவையான நன்மை தரும் பேக்டிரியாக்களை சப்ளைசெய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வாலாகும்.

குடல்வால் ஆட்டுக்குதாடியை போல ஒரு அநாவசிய-உறுப்பு அல்ல. பழங்காலத்தில் காடுகளில் சுகாதாரம் அற்ற சூழலில் வாழ்ந்த நம்முடையமூதாதையர்களுக்கு இந்த குடல்வால் ஒரு-பாதுகாப்பு சாதனமாக இருந்தது என்பதே உண்மை.

{qtube vid:=4yc1ZJ5p7GA}

அப்பென்டிக்ஸ், குடல்வால், குடல்வாளை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...