மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

 மஞ்சள் காமாலைக்கு சித்த மருத்துவ சிகிச்சை குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, மாமிசம், புகைப்பழக்கம், போதை பொருட்களால் முதலில் பாதிக்கப்படுவது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியன. இவற்றின் செயல்திறன் குறையும்போது இரத்தம் வலிமை குன்றி நோய் எதிர்ப்புச் சக்தி நாளுக்கு நாள் பலமிழந்து இரத்தசோகை ஏற்படுகிறது. இந்தக் கட்டத்தில்தான் எல்லாவித வைர°களும் சுறுசுறுப்படைந்து இரத்தத்தில் கலந்து இரத்தத்தின்

இயல்புகளை சிதைக்கின்றன. அவ்வாறு சிதைவு அடையும் இரத்தம், பல நோய்களுக்கு வழிவிடுகிறது. அவற்றுள் ஒன்றுதான் ‘மஞ்சள் காமாலை’. முதலில் இரத்த சோகை, பசியின்மை, ருசியின்மை, கண் பார்வை மங்கல் மேனி வெளுத்தல், உடல் உஷ்ணமடைதல், தோல் வற்றிப் போதல், கை கால் வலி, அசதி, மலம் வெளுத்துப் போதல், சிறுநீர் எரிச்சலுடன் மஞ்சளாகப் போதல் எனப் படிப்படியே காமாலை நோய்க் குறிகள் தென்படும். இந்தக் கட்டத்தில் உடனடியாக சிறுநீரையும், இரத்தத்தையும் சோதித்தால் காமாலையின் தாக்குதல் எந்த நிலையில் உள்ளது என கண்டறியலாம்.

 மஞ்சள் காமாலை

இத்துடன் கட்டாயம் பார்க்க வேண்டியது Hbs Ag எனும் B-virus காமாலை மற்றும் C-virus காமாலை ஆகும். Bilirubin 2க்கு மேல் இருக்குமேயானால் காமாலை அதி விரைவாக வளர்கிறது என்று அர்த்தம். அதேபோல் SGOT, SGPT, Alkaline Phosphate 100க்கு மேல் செல்லுமானால் காமாலை தீவிரமடைகிறது என்று பொருள். உடனடியாக எல்லாவிதமான நார்மல் உணவுகளை நிறுத்திவிட்டு உப்பில்லாத மோர்சாதம், இளநீர், கஞ்சி மட்டும் சாப்பிட்டு காலை-மாலை கீழாநெல்லி செடியை வேருடன் பிடுங்கி அலசி அதில் வெந்தயம் கால் °பூன் சேர்த்தரைத்து மோருடன் சாப்பிட வேண்டும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி இலைகளை காலை – பகல் இருவேளை 10 இலைகளைப் பறித்து வெந்நீரில் அலசி அப்படியே மென்று சாப்பிட வேண்டும். சித்த மருத்துவத்தில் திரிபலா சூரணம், தாளிசாதி சூரணம், ஏலாதி சூரணம் என்று சில சூரணங்கள் உண்டு. இவற்றை மாத்திரை வடிவிலும் பெறலாம். காலை-மாலை-இரவு இவற்றை கால் °பூன் வீதம் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட வேண்டும். மாத்திரை என்றால் 2 மாத்திரை வீதம் சாப்பிடலாம். அதாவது காலையில் ஏலாதி சூரணம் கால் °பூன், மாலையில் தாளிசாதி சூரணம், இரவில் திரிபலா சூரணம். இப்படி தினசரி சாப்பிட்டு உப்பில்லா பத்தியம் 1 வாரம் இருக்கவும். பழங்கள், காய்கறிகள், கீரைகள், ஊறுகாய், பட்சணங்களைக் குறைந்தது 15 நாட்களுக்குச் சாப்பிடக் கூடாது. வெந்நீரை ஆறவைத்துப் பருகவும்.

பாத்ரூமை உடனடியாகக் கழுவவும். பசிக்கும் போதெல்லாம் உப்பில்லாத அரிசி நொய் கஞ்சி, பார்லி கஞ்சி, கோதுமை ரவை கஞ்சி, மோர் சாதம், இளநீர் போன்றவற்றை பகலிலும், இரவில் பால் சாதம், பால் மட்டும் சாப்பிடலாம். தேவையானால் சர்க்கரை சேர்க்கலாம். வாரம் 1 நாள் மீண்டும் சிறுநீர் இரத்தத்தைச் சோதித்தால் எல்லாம் பாதி அளவு குறைந்திருக்கும். இதே உணவு மருந்துகளை மேலும் 1 வாரம் நீடித்தால் காமாலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அதற்குப்பின் 1 மாதம் வேகவைத்த உணவுடன் உப்பு பாதி அளவு மட்டும் சேர்த்து சாப்பிட்டு வரவும். இறுதியாக ஒருமுறை காமாலைக்கான இரத்தம், சிறுநீர் சோதிக்கவும். எல்லாம் நார்மலாக இருக்குமேயானால் படிப்படியாகப் பொறியல், அவியல், வறுவல் சேர்க்கலாம். 6 மாதம் கழித்து அசைவ உணவு சேர்க்கலாம்.

B-virus, C-virus (Hbs Ag Positive) காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை பாதி உப்பு, சைவ உணவு என்று பத்தியமுடன் சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை பெற்றுவர அவை negative ஆக மாற வாய்ப்புண்டு.

மஞ்சள் காமாலை, மஞ்சள்காமாலை

One response to “மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...