எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை: உறுதி செய்தது இந்திய ராணுவம்

”சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது” என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பஹல்காம் சம்பவத்திற்கு பதிலடியாக, ‘ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயரில், நம் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தனர். இதற்கிடையே கடந்த 10ம் தேதி, இருதரப்பிலும் போர்நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இருநாடுகளின் டி.ஜி.எம்.ஓ., எனப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல்கள் நேற்று பேச்சு நடத்தினர். அப்போது, இருதரப்பிலும் போர் நிறுத்த நடவடிக்கைகளை சுமூகமாக கடைப்பிடிப்பது குறித்து ஆலோசனை நடந்தது.

தற்போது ஜம்மு-காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

நேற்று இரவு சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ”எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. இருப்பினும், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்” என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...