விக்கிலீக்ஸ் வெப்சைட் வெளியிட்டுள்ள அமெரிக்க வெளியுறவு துறை தொடர்பான ரகசிய ஆவணங்களில்;- லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத அமைப்புகளை விட, பழமைவாத இந்து அமைப்புகளினுடைய வளர்ச்சியால் நாட்டின்னுடைய பாதுகாப்புக்கு ஆபத்து உள்ளது’ என்று அமெரிக்க தூதர் திமோதிரோமெரிடம் ராகுல் காந்தி கூறிய கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது , இதற்கு பா.ஜ., மற்றும் ஆர்.எஸ். எஸ். அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது குறித்து பாரதிய ஜனத்த கடும் கண்டனம் தெரிவித்துள்ளது , தனது அறிக்கையில் தெரிவித்ததாவது;
நாட்டில் மதம் தொடர்பான பிரச்னையை உருவாக்க காங்கிரஸ் விரும்புகிறது. அதன் மூலம் தேர்தல் ஆதாயம் பெற நினைக்கிறது. எனவே தான் ராகுல் காந்தி இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்’ என்று , பா ஜ க கூறியுள்ளது.
இது குறித்து பா ஜ க வின் தகவல் தொடர்பாளர் தருண் விஜய் கூறியதாவது , “ஊழல் மற்றும் விலைவாசி-உயர்வு பிரச்னையால் காங்கிரஸ்* கட்சியினர் விரக்தியில் உள்ளனர். தேர்தலில் தோற்று விடுவோமோ என்று அஞ்சுகின்றனர். அதனால் தான் இந்து அமைப்புகள் மீது குற்றம் சுமத்துகின்றனர் . இது அவர்களினுடைய பழைய தந்திரம்’ என்றார். “
பா.ஜ.க வின் மற்றொரு தகவல் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது
ராகுல் காந்தியின் கருத்து பொறுப்பற்றதாக உள்ளது . மும்பை தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல்களை, பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய மண்ணில் நடத்திய பிறகும், ராகுல் இப்படி பேசுகிறார் எனில், இந்தியா மற்றும் அதன் பிரச்னை பற்றி ராகுல்லுக்கு விபரம் தெரியவில்லை என்று அர்த்தம், பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஊக்கம் தருவது போல ராகுலின் கருத்து உள்ளது,” என்றார்.
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.