தங்கம் வாங்குவதை ஓராண்டுக்குத் தவிர்க்குமாறு தான் விடுத்த கோரிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டதால், தங்கத்தின் விலை குறைந்து பொதுமக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள இந்திரா காந்தி பிரதிஷ்டான் அரங்கில் நடைபெற்ற 5-வது தேசியத் திறன் மேம்பாட்டுப் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
மக்களின் ஒத்துழைப்பும் சேமிப்பும்
“கடந்த ஓராண்டுக்கு முன்பு, நாட்டு மக்கள் தங்கம் வாங்குவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். என்னைப் போன்ற ஒரு சாதாரண மனிதனின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து மக்களும் தங்கம் வாங்குவதைக் குறைத்தனர். இதன் எதிரொலியாகச் சந்தையில் தங்கத்தின் விலை சரிந்தது. இன்று என்னைச் சந்திக்கும் பலரும், ‘உங்கள் ஆலோசனையைக் கேட்டதால் எங்கள் பணம் பெருமளவு மிச்சமானது’ எனக் கூறுவது மகிழ்ச்சியளிக்கிறது.
சாஸ்திரி காலத்து ஒற்றுமை
கடந்த காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை நிலவியபோது, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி விடுத்த வேண்டுகோளை ஏற்று, நாட்டு மக்கள் ஒரு வேளை உணவைத் தவிர்த்தனர். தேச நலனுக்கான அந்தக் கூட்டுப் பங்கேற்பு உணர்வு இன்றும் இந்திய மக்களிடம் குறையாமல் இருப்பதைக் கண்டு நான் பெருமை கொள்கிறேன்.
பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி
கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றியபோது, இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்தால் வளம் பெறலாம் எனக் குறிப்பிட்டேன். அப்போது எதிர்க்கட்சியினரும் சில விமர்சகர்களும் என்னைக் கேலி செய்தனர். ஆனால், அன்று என் வார்த்தைகளை நம்பி முதலீடு செய்தவர்கள் இன்று மிகப்பெரிய லாபத்தையும் செழிப்பையும் அடைந்துள்ளார்கள் என்பதற்குக் காலமே சாட்சியாக நிற்கிறது” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |