பாரதீய ஜனதா நாளுக்கு நாள் வலிமைபெற்று வருகிறது

 பாரதீய ஜனதா நாளுக்கு நாள் வலிமைபெற்று வருகிறது நரேந்திரமோடி அலையை யாராலும் தடுத்துநிறுத்த முடியாது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் வெங்கையா நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பாரதீய ஜனதா நாளுக்கு நாள் வலிமைபெற்று வருகிறது. இதனால் மற்றகட்சிகள் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளன. நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவாகவும். பா.ஜ.க.,வுக்கு ஆதரவாகவும் அலைவீசுகிறது. இதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது.

நாட்டு மக்களின் சிறப்பான எதிர் காலத்துக்காக வளர்ச்சி ஒன்றையே நோக்கமாக கொண்டு பாஜக பாடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சகாப்தமும், பரம்பரை ஆட்சி கலாசாரமும் இந்ததேர்தலுடன் முடிவுக்கு வரும்.

பா.ஜ.க பிராந்திய கட்சி அல்ல, தேசியகட்சி. எனவே ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதோடு, தெலுங்கானா, சீமாந்திரா பகுதிகளின் மேம்பாட்டிலும் கவனம்செலுத்தும். பாஜக.,வால் மட்டுமே நிலையான, வலிமையான அரசை தரமுடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். நரேந்திர மோடியின் மூலம் இந்ததேசம் முன்னேற்றம் காணப்போகிறது.

பிராந்திய கட்சிகளுக்கு வாக்கு அளித்தால், அது காங்கிரசுக்கு உதவி செய்வதாகத் தான் அமையும். எனவே அந்த கட்சிகளுக்கு வாக்கு அளிப்பதால் எந்தபயனும் இல்லை.

பாஜக மீது காங்கிரஸ் தவறான குற்றச்சாட்டுகளை கூறிவருகிறது. தேர்தலில் நாங்கள் செலவிடும் பணம் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டபணம் ஆகும். செலவுவிவரம் பற்றி நாங்கள் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கிறோம். தேர்தல் கமிஷனுக்கு மட்டும் தான் நாங்கள் பதில்சொல்ல கடமைப்பட்டு இருக்கிறோம்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு போன்ற பல்வேறு ஊழல்கள்மூலம் சட்டவிரோதமான வழிகளில் காங்கிரசுக்கு பணம் வந்துள்ளது. அந்தபணத்தை அவர்கள் தேர்தலில் செலவிடுகிறார்கள். ஆனால் பாஜக.,விடம் அப்படிப்பட்டபணம் எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் எங்களுடைய செயல்பாடு ஒளிவு மறைவற்றதாக உள்ளது.

பாராளுமன்ற தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடிக்கும், தெலுங்கானா மற்றும் சீமாந்திராவிலும் தெலுங்குதேசம்–பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...