நரேந்திர மோடியும் பராக் ஒபாமாவும் இணைந்து வானொலியில் உரை

 பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இணைந்து இன்று 27-ம் தேதி செவ்வாய்க் கிழமை இரவு 8 மணிக்கு மனதின் குரல் என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் 4-வது முறையாக உரையாற்ற உள்ளனர்.

காரைக்கால் வானொலி நிலைய உதவி இயக்குனர் (நிகழ்ச்சிகள்) கே.சித்ர லேகா சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது குறித்து கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி இன்று 27-ம் தேதி செவ்வாய் கிழமை இரவு 8 மணிக்கு மனதின் குரல் என்ற தலைப்பில் நாட்டுமக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் 4-வது முறையாக உரையாற்ற உள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா இணைந்து உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சி நாடெங்கும் உள்ள அகில இந்திய வானொலியின் அனைத்து அலை வரிசைகளிலும் ஒலிபரப்பாகும்.

பாரத பிரதமர், அமெரிக்க அதிபர் ஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சியின் தமிழாக்கத்தை 28ம் தேதி புதன் கிழமை காலை 9 மணிக்கு சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பும். இந்த இரு நிகழ்ச்சி களையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல்செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உ ...

காஷ்மீர் சென்றார் ராணுவ தளபதி உபேந்திர திரிவேதி! பஹல்காமில் தாக்குதல் நடந்த சூழ்நிலையில், இந்திய ராணுவ தளபதி ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீட ...

காஷ்மீரில் பயங்கரவாதியின் வீடு வெடிவைத்து தகர்ப்பு; ராணுவத்தினர் அதிரடி காஷ்மீர் எல்லைக் கோட்டுப்பகுதியில் ஒரு சில இடங்களில், ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவா ...

பாகிஸ்தான் பற்றவைத்த பயங்கரவாத தீ.. தண்ணீரால் பதிலடி தந்தது இந்தியா பூமியில் ஒரு சொர்க்கம் இருந்தால், அது இது தான்... ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்ற ...

அனைத்துகட்சி கூட்டத்தில் ஒற்றுமை குரல் : பயங்கரவாதத்தை ஒடுக்க சூளுரை பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டில்லியில் நேற்று நடந்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்த ...

அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிற ...

துயரமான நேரத்தில் துணை நிற்கிறோம் – இந்தியாவுக்கு பிரான்ஸ் அதிபர் உறுதி ''இந்த துயரமான நேரத்தில் பிரான்ஸ், இந்தியாவுடனும் அதன் மக்களுடனும் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...