தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் நிற்க வேண்டும். வேறு எதிலும் சென்று சிதறக் கூடாது. சிலர் இயல்பாகவேப் பெற்றிருக்கலாம். மற்றவர்கள் முயன்று தான் வசப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சிறுவயதிலேயே ஐந்து அல்லது ஆறு வயதுகளிலேயே, மனதை ஒரு பொருளில் ஊன்றிச் செலுத்தும் பயிற்சிகளைத் தொடங்குவது நல்லது. மனம் அப்போது வளைந்து கொடுக்கும். எளிதில் பழகிவிடும். பழக்கம் பின்னர் வழக்கமாகிவிடும். சிறு வயதைக் கடந்தவர்கள் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும். சிறிது சிறிதாகத் தான் வெற்றி பெற முடியும். தியானத்தில் மனதை நிலையாக ஊன்றவும் முடியும்.
மனம் ஈடுபாடு கொண்டு ஒன்றில் முழுமையாக ஒன்றும் போது தான் மனம் ஒருமைப்படும். மனதை ஒருமுகப்படுத்திப் பழகிவிட்டால், விரும்பும் எதனிடத்தும் அதை முழுமையாக ஒன்றும்படி செய்யலாம். முயற்சி, பயிற்சி செய்தால், உயர்ச்சி நிச்சயம்.
போர்க்களத்தில் எதிரியை வீழ்த்துவதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தும் மாவீரன் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் முன்னேறிச் செல்வான். இப்படிப்பட்ட ஒருமித்த கவனம் தியானத்தின் மீது செல்ல வேண்டும்.
தனது எண்ணம் சிதறல் இல்லாமல், மனம் ஒரே செயலிலோ, காட்சியிலோ குவிந்து விடுவது சில சமயங்களில் இயற்கையாகவே ஏற்படுவதும் உண்டு. நம்மையரியாமைய்யிலேயே ஒருமுகக் கவனம் ஏற்பட்டு விடும். அவர்கள் மனம் அதில் முழுமையாகக் கலந்துவிடுவதுதான் இதற்குக் காரணம்.
நன்றி : பானுகுமார்
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.