ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் அந்த ஆரோக்கியத்தை எப்படி பராமரிப்பது என்று புரியாத நிலையில் தான் அல்லது புரிந்திருக்கும் புறக்கணிக்கிற நிலையில்தான் நோயின் பிடியில் சிக்கிக் கொள்ளும்படி ஆகிறது.
இன்னொரு உண்மையையும் இங்கு சொல்ல வேண்டி இருக்கிறது. நமக்கு வருகிற நோய்கள் பலவற்றுக்கும் அடிப்படைக் காரணமே நாம் உட்கொள்ளும் சீர்கெட்ட உணவுதான். சமபோஷாக்குள்ள சீரான உணவை சாப்பிட வேண்டும்.
நோய் வந்துவிட்டால் நோயைத்தவிர மற்றவைகளும் மனிதரை அவதிப்படுத்த வந்து சேர்ந்து விடுகின்றன. எந்த மருத்துவத்தை நாடுவது (மருத்துவத்தில் அத்தனை வகை) எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது, உட்கொள்ளும் மருந்தின் பின் விளைவுகள், பக்கவிளைவுகள் என்று மண்டையைப்பித்துக் கொள்ள அனேக சமாச்சாரங்கள்.
இயற்கை மருத்துவத்தில் இந்தப் பிரச்சனைகள் இல்லை. ஒரு இயற்கை மருத்துவரின் ஆலோசனையோடு தனது நோய்க்குரிய காய்கறிகள், பழங்கள் பற்றி அறிந்து அவற்றைப் புசிக்கலாம். பிணி நீக்கி ஆரோக்கியமாக வாழலாம்.
இயற்கை சிகிச்சைகள் ஆறுவகை
உபவாசம்
முளை கட்டின பயறுவகைகள்
காய்கறி, பழங்கள்(பழச்சாறு)
காந்தசிகிச்சை
அக்யூபஞ்சர்
இயற்கை வழி சிகிச்சை (சிறுநீர் சிகிச்சை மாதிரி)
நன்றி : நரேந்திரன்
You must be logged in to post a comment.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
1mercantile