நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ஒரு படி தண்ணீர்விட்டு – நன்கு காய்ச்சி வடித்து பனைவெல்லம் கூட்டி காலை மாலைகளில் ஒருவாரம் அல்லது பத்து நாட்கள் பருகலாம்.
ஆவாரம்பூ, செம்பரதைப்பூ, வாழைப்பூ இவைகளைச் சுத்தம் செய்து லேசாகக் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு போட்டு ஒரு நாளைக்கு மூன்று வேளைகள் ஒரு மண்டலம், பருகி வந்தால், நீண்ட நாட்களாகத் தொல்லை கொடுத்து வந்த பெரும்பாடு பூரண குணமாகும்.
அத்தி இலை, நாகை இலை, அருகம்புல், வில்வ இலை, வேப்பிலை, கீழக்காய் நெல்லி இலை இவைகளைச் சுத்தம் செய்து, நன்கு மர உலக்கையால் இடித்து, சிறிது நீர் தெளித்து, சாறு எடுத்து காலை மாலை ஒரு மண்டலம் குடிக்கக் குணமாகும்.
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.