நியூயார்க்கில் உள்ள வால் டார்ப் அஸ்டோரியா ஹோட்டலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துபேச வரும் 47 அமெரிக்க சிஇஓக்களுக்காக இந்திய பாரம் பரியமிக்க உணவு வகைகள் சமைக்கப்பட உள்ளன.
பிரதமர் நரேந்திரமோடி 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவர் நியூயார்க்கில் உள்ள வால்டார் அஸ்டோரியா ஹோட்டலில் தங்கியுள்ளார். ஹோட்டலுக்கு வந்த மோடிக்குத அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் மோடி 47 அமெரிக்க சிஇஓக்களை நாளை சந்தித்துபேசுகிறார். அவர் முதலீடு குறித்து சிஇஓக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இரவு நடக்கும் பேச்சுவார்த்தைக்கு வரும் சிஇஓக்களுக்கு இந்தியபாரம்பரிய உணவு வகைகளை சமைத்து கொடுக்கிறார் பிரபல சமையல் கலைஞரான விகாஸ் கன்னா.
நியூயார்க்கில் ஜுனூன் என்ற ஹோட்டலை நடத்திவரும் கன்னா பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவர். நாளைய விருந்து உணவுபட்டியலில் பொங்கல், பிசிபெலாபாத், தேங்காய் சட்டினி, தன்டாய் சிக்கன், மிசோரம் கிச்சடி, மாம்பழ இஞ்சி சூப், தந்தூரி அன்னாசி, பன்னீர் ரவியோலி, பார்சி பத்ரானி மீன், தீபாவளி மிதாய், காரமெல் கஸ்டர்ட், ஏழைக்காய் பால் என பலவகை பரிமாறப்படுகின்றன.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.