இந்தியாவில் சீன முதலீடுகள் அதிகரித்துள்ளதை வரவேற்கிறேன்

  இந்தியாவில் சீன முதலீடுகள் அதிகரித்துள்ளதை வரவேற்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். சீன துணை அதிபர் லீ யுவான் சாவ் ஐந்து நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள அஜந்தா குகை, கொல்கத்தாவில் உள்ள ரவீந்திர நாத் தாகூர் இல்லம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதி மற்றும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்துபேசினார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, சீன துணைஅதிபர் லி யுவான்சோ நேற்று சந்தித்து பேசினார். அப்போது, சீன அதிபர் ஜி ஜின் பிங் இந்தியாவிற்கு வந்துள்ளதையும், தான் சீனாவிற்கு சென்ற அனுபத்தையும் லி யுவான் சோவிடம் மோடி பகிர்ந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, இந்தியாவில் சீன நாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதை வரவேற்பதாக பிரதமர் மோடி கூறினார். மேலும் இந்தியாவிற்கு வருகை தரும் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...