விஜயகாந்தை பொருத்தவரை எந்த பக்கமும் போகமாட்டார்

மயிலாப்பூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் ஏற்பாட்டில் நிவராண உதவிகள் வழங்கப்பட்டது.

சுமார் ஆயிரம் பேருக்கு நிவாரண உதவிகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த 1 மாதமாக பாரதீய ஜனதா சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்து உள்ளோம். நிவாரண பணிகளில் பா.ஜனதா முதல்நிலை வகிப்பதில் பெருமைபடுகிறோம்.

தமிழக வெள்ளசேதம் பற்றி அறிந்ததும் பிரதமர் மோடி நேரடியாகவந்து பார்த்ததுடன் ரூ.2 ஆயிரம்கோடி முதல் கட்டமாக ஒதுக்கினார்.

வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகட்டி தரப்படும் என்று வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கபடும் என்று அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். பாதிப்படைந்த தொழிற்சாலைகளை மறுசீரமைக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தன்ராஜ் மித்ரா அறிவித்து உள்ளார்.

சுங்கச் சாவடி கட்டணத்தை இலவசமாக்கியதன் மூலம் ரூ.60 கோடி உதவி செய்யப்பட்டுள்ளது. சமையல் சிலிண்டர்களை இழந்தவர் களுக்கு ரூ.200 கட்டணத்தில் சிலிண்டர் வழங்கப்படுகிறது.

சுகாதாரதுறை சார்பில் 7 பேர் கொண்டகுழு வருகிறது. பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு அதிகப்படியான அளவில் மத்திய அரசு உதவிசெய்து வருகிறது. நிவாரண நிதிகேட்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். எவ்வளவு அதிகமாக நிதி ஒதுக்க முடியுமோ அந்தளவுக்கு மத்திய அரசு ஒதுக்கும்.

ஜல்லிக் கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி முதல்–அமைச்சர் ஜெயலலிதா, திமுக. தலைவர் கருணாநிதி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பலமுறை பேசி ஒரு முடிவை நெருங்கி உள்ளோம். பேச்சுவார்த்தை விவரங்களை வெளியில் சொல்ல முடியாது. ஆனால் பேசப்பட்ட விதத்தை வைத்து கண்டிப்பாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று உறுதியாக சொல்ல முடியும்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை மக்கள் நலக்கூட்டணியினர் சந்தித்ததும், தி.மு.க. தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்து இருப்பதும் அரசியலில் நடப்பவைதான். ஒவ்வொரு கட்சிக்கும் ஒருகருத்து இருக்கும். ஆனால் விஜயகாந்தை பொருத்தவரை எந்த பக்கமும் போகமாட்டார். அவர் எங்கள் கூட்டணியில் தான் தற்போது இருக்கிறார் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...